Monday 29 December 2008

Three in one.

காட்சி 1:
நேரம் : ஒரு மாதத்துக்கு முன்
இடம் : எங்க வீட்டு ஹால்.
பங்கேற்போர் : ப்ரியா, கதிரவன்

" நான் 'A Wednesday' பாத்துட்டேன்..."

"எப்டி???எங்க??எப்போ??"

"wait, ஒரே நேரத்துல இத்தனை கேள்வியா?...அன்னைக்கு சனிக்கெழமை நீங்க செல்வா கல்யாணத்துக்கு சென்னை போய்ட்டீங்கள்ல??? அப்போ மதியானம் அர்ஜுனை தூங்க வெச்சுட்டு, லேப்டாப் ல பாத்தேன். எல்லாரும் சொல்லி வெச்ச மாறி.....'its a must watch' ன்னு சொன்னாங்கல்ல.........அதான் பொறுக்க முடியாம பாத்துட்டேன்."

"அது சரி, ஆனா படம் எங்க இருந்து கெடச்சுது....?"

"எங்க ஆபீஸ் ல share folder ல போட்டுருந்தா ஒரு பொண்ணு...அத copy பண்ணி கொண்டு வந்தேன்...."

"அட பாவி....நெட்வொர்க் ஐ இதுக்கு எல்லாம (mis)use பண்ணுவாங்க???"

":-)"

"........."

"நீங்களும் அந்த படம் பாக்கணும்.....உண்மைலயே நல்லா இருந்துச்சு....its based on mumbai blast. நஸ்ருதீன் ஷா வும், அனுபம் கேரும் தான் casting. படத்துல no commercials....Just matter, மொத்த படமுமே ஒரு நாள்ல முடியுற மாறி ஸ்டோரி தான். "

"................"

"actually not very tough hindi....unlike Omkaara.....நல்லா புரியும்....delete பண்ணாம தான் வெச்சுருக்கேன்....பாக்கணும் னா சொல்லுங்க...லேப்டாப் எடுத்துட்டு வரேன்"

".........."

"அங்க அங்கே light காமெடி...ஒரு சீன் ல அனுபம் கேர் வந்து ஒரு சீரியஸ் mission ல இருப்பாரு..ஒரு call trace பண்றதுக்காக police, hackers எல்லாரும் ரெடி யா இருப்பாங்க...அப்போன்னு பாத்து, அவருக்கு "we are calling from ICICI bank regarding credit card ன்னு ஒரு call வரும் பாருங்க....செம சீன் அது..."

"............."

"அப்றோம் I am A drop out by choice sir" ன்னு அந்த hacker கலக்குற scene....."

"அடங்குறியா?"

"...................."


*************************************************

காட்சி 2:
நேரம் : ரெண்டு வாரத்துக்கு முன்னாடி
இடம் : எங்க வீட்டு balcony
பங்கேற்போர் : ப்ரியா, கதிரவன்

"உங்கள download பண்ணி தாங்க, DVD வாங்கி தாங்க ன்னு கேட்டு கேட்டு bore அடிச்சு போயி, நானே எங்க டீம் கணபதி கிட்ட DVD கேட்டு வாங்கி, 'Taare Zameen Par" பாத்துட்டேன்.

"இது எப்போ??"

"அன்னைக்கு நீங்க team-outing போய்ட்டீங்கள்ல? அப்போ நைட் பாத்தேன்"

"நல்லா இருந்துச்சா?"

"நல்லா இருந்துச்சாவா???? என்ன படம் அது....சான்ஸ் ஏ இல்ல...."

"நீ அமீர் கான் எது பண்ணாலும் நல்லா இருக்குன்னு தான் சொல்வே....Dil Chahta hai என்ன ஒரு இருவது தரம் பாத்து இருப்பியா???"

"நீங்க மட்டும் நல்லா இல்லன்னா சொல்வீங்க??? கஜினி படம் பத்தி ஏதாவது ஓரத்துல scoop news வந்தா கூட படிச்சுட்டு பத்து பேருகிட்ட சொல்லி, அவங்க பண்றது பத்தாதுன்னு உங்க பங்குக்கு நீங்க promote பண்றீங்க....நானே அமீருக்கு promotion charges அனுப்பலாம் ன்னு இருக்கேன்"

"அது எங்க ஆளு அசின் அவங்களுக்காகவும் , அப்றோம் நம்ம டைரக்டர் murugadoss அங்கே போய் ஒரு project பண்றாரு, படம் நல்லா போணுமேன்னு ஒரு எண்ணத்துல செய்றேன்"

"ஒத்துக்க மாட்டீங்களே??? சரி அது இருக்கட்டும்.....அந்த படம் பாக்குறப்போ நான் எப்டி தெரியுமா அழுதேன்...."

"ஹிஹிஹி.....நீ அழுததெல்லாம் சேத்தி இல்ல.....காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் க்கே கண்ணீர் சிந்துன ஆளு நீ"

"இந்த படத்துல அந்த குட்டி பையன் அழுறப்போ, உங்களை மாறி பாறை நெஞ்சுள்ளவனுக்கு கூட கண் கலங்கும் தெரியுமா???"

"சரி சரி, ஏதும் சொல்லாதே....நான் படமே பாத்துக்குறேன்.....என்னை விட்டுட்டு பாத்துட்டே இல்ல....போ போ "

"நீங்க மட்டும் என்னை விட்டுட்டு 'பொய் சொல்ல போறோம்' PVR ல போய் பாத்தீங்கல்ல...?....நீங்க Taare Zameen Par எப்போ பாப்பீங்க???உங்க கூட உக்காந்து நானும் இன்னொரு வாட்டி பாக்கணும்"

"நீ திருந்தவே மாட்டே"

**********************************

காட்சி 3:
நேரம்: ரெண்டு நாளைக்கு முன்னாடி.
இடம்: Transit, Forum Mall
பங்கேற்போர் : ப்ரியா, கதிரவன், கதிரவனின் அக்கா, அக்கா கணவர், அக்கா மகள்.

"என்ன படம் புடிச்சுதா????"

"ஓவர்ஆல் நல்லா இருந்துச்சு....சூர்யா பிரம்மிக்க வெச்சுட்டாரு.....6 packs கூட இப்போ எல்லாரும் பண்றாங்க....ஆனா அந்த ஸ்கூல் பையன் மாறி வராரு பாரேன்....கலக்கிட்டாரு...."

"ஆனா நீ ஏண்டா எங்களை ஒரு படம் பாக்க இவ்ளோ தூரம் அலைய வெச்சே...பஸ் லையும் ஆட்டோலயும் மாறி மாறி Forum வந்து சேர்றதுக்குள்ள..."

"பின்ன சும்மாவா?? PVR ல படம் பாக்குறதுன்னா....நாங்களும் மூணு வருஷம் கழிச்சு இப்போ தான் PVR வந்துருக்கோம்..."

"ஆனா இந்த படத்துல flash back மாறி line by line கதை சொல்லுறது கொஞ்சம் கடுப்பு.....அதிலும் 'நான் பைக் ல போன நாட்கள்" ன்னு background ல சொல்லுறப்போ, சூர்யா பைக் ஓட்டுறாரு...:-) ரேடியோ நாடகத்துல எல்லாம், நம்ம கேக்க மட்டுமே முடியும் என்பதால், ஒரு charecter scene ல enter ஆறதை visualise பண்ண வெக்குறதுக்காக...."இதோ அவரே வந்துட்டாரே" அப்டின்னு டயலாக் வெப்பாங்கள்ல....அந்த மாறி.... "

"சமீரா ரெட்டி தான் கண்ணுக்குள்ளயே இருக்கா"

"ஆமா எனக்கு கூட பொண்ணுங்க குத்து வெளக்கு மாறி இருக்குறது விட, இப்டி ஒயரமா , smart ஆ, கண்ணுல வெக்கத்துக்கு பதிலா, தன்னம்பிக்கையை தேக்கி வெச்சுட்டு இருக்குறது தான் ரொம்ப புடிக்கும்...சமீரா ரெட்டி அந்த ரகம், எனக்கும்
கண்ணுக்குள்ளயே இருக்காங்க,"

"இவ கிட்ட இதான் பிரச்சனை, நான் ஏதாவது பொண்ணு பிடிக்கும் ன்னு சொன்னா ideally இவளுக்கு கோவம் தான வரணும்? அத விட்டுட்டு இவ எனக்கு மேல அந்த பொண்ண ரசிக்க ஆரம்பிச்சுடுவா....the whole மஜா is lost. I doubt if its her strategy."

":-))"

"எனக்கு இந்த கேக் வேணாம், புடிக்கலை"

"சரி அத நாங்க சாப்பிடுக்குறோம், நீ அப்பா கூட போய் வேற ஏதாச்சும் வாங்கிக்கோ, kathir, இங்க காபி நல்லா இருக்குடா..."

"ஒரு coffee 25Rs, ஆனா இப்டி relaxed ஆ உக்காந்து சாப்பிட முடியுதுல்ல....also quantity is good."

"பாட்டெல்லாம் நல்லா இருக்குல்ல..."

"ஆமா, ஆனா இப்டி ஒரு படத்துக்கு அஞ்சலை பாட்டு தேவையா தெரியலை....நல்லா வேளை...ஒரு item-girl சேந்து ஆட விடலை....அது வரைக்கும் ஓகே...அப்றோம் அந்த பாட்டு end ல சூர்யா ஒரு restaurant ல இருந்து வெளிய வருவாருல்ல....அத பாத்து எனக்கு இந்த பதிவு தான் ஞாபகம் வந்துச்சு"

"குட்டி சூர்யா பெரிய சூர்யாவை அப்பா அப்பா ன்னு கூப்பிட்டு இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும் ல...daddy dad ன்னு எல்லாம் கூப்பிடுறது கொஞ்சம் மனசுக்கு ஒட்டலை..."

"ராஜி இந்த படம் பாத்தப்போ இத பத்தி நெனச்சேன்னு சொன்னாங்க."

*******************************************************
With that, this is wishing for you, a happy,healthy and peaceful new year.May God shower love and peace upon all of us.
******************************************************

Tuesday 16 December 2008

Airtel Super Singer -2008

அப்போ தான் சாப்பிட்டு முடிச்சு, kitchen ஒதுங்க வெச்சுக்கிட்டோ, மறுநாள் சமையலுக்கு வேண்டிய காய் நறுக்கிட்டோ இருக்குற டைம்.
அர்ஜுன் வேற அப்பப்போ வந்து 'அம்மா தூக்கணும்மா.....தூக்கணும்மா.." ன்னு சொல்லிட்ருப்பான்
நான் நறுக்குறது வெள்ளரிக்காயா இருந்தா....'அம்மா ஒரு துண்டு குடுங்க பிள்ளைக்கு' ன்னு கேக்க வேண்டியது.....
அவன ஏதாவது சொல்லி ஹால் க்கு அனுப்பி வெச்சா...கொஞ்ச நேரத்துல அவங்க அப்பா கூடவோ ஆச்சி கூடவோ சண்டை போட்டு...ஊ ன்னு கத்திக்கிட்டு kitchen க்கு ஓடி வருவான். அவனுக்கு யார் கூடவாவது சண்டைன்னா உடனே அம்மா ஞாபகம் வந்துடும்...:-)

இதை எல்லாம் சமாளிச்சுக்கிட்டே......ஆனாலும் ஒரு கண்ணையும்(kitchen ல இருந்து பாத்தா டிவி ஓரளவுக்கு தெரியும்) ரெண்டு காதையும் டிவி பக்கம் வெச்சு, நான் விடாம follow பண்ற ஒரு/ஒரே program - Airtel Super Singer - 2008.


அர்ஜுன் பொறந்து maternity break ல இந்தியா வந்தப்போ, Airtel Super Singer ஜூனியர் எல்லா episodeம் பாத்து, அது பத்தாதுன்னு retelecase பாத்து, அதுவும் பத்தாதுன்னு youtube ல பாத்து.....இப்போ யாரு எந்த round ல என்ன பாட்டு பாடினான்னு கூட மறக்காம சொல்லுவேன்.
கிருஷ்ணமூர்த்தி யும் , விக்னேஷ் ம் finale ல பாடின 'சங்கீத ஜாதி முல்லை' ,
'வந்தாள் மகா லக்ஷ்மியே' இந்த ரெண்டு performance ஐயும், இப்போ பாத்தா கூட எனக்கு கண் கலங்கிடும்....:-) (கண் கலங்குறதுக்கு smiley போடறது எல்லா ரொம்ப டூ மச்)

அதே effect ல, Airtel Super Singer -2008 ம் பாக்க ஆரம்பிச்சு, இப்போ பத்து போட்டியாளார்கள் மிஞ்சி இருக்குற வரைக்கும் follow பண்ணியாச்சு. இதுல என்னன்னா, வீட்டுல இன்னொரு டிவி க்கு DTH போன சண்டே தான் வந்துச்சு....so இது வரைக்கும் உள்ள எல்லா episode க்கும் strong competition இருந்துச்சு....அபியும்,செந்தமிழ் அரசியும் ...
எப்போடா break வரும் ன்னு பாத்துட்டு இருந்து, உடனே 'please விஜய் டிவி மாத்துங்கன்னு kitchen ல இருந்து கத்தி, மாத்த வெச்சா, சில நேரம் correct ஆ அங்கேயும் chinmayi சிறிய விளம்பர இடைவேளைன்னு சொல்லுவாங்க....
'அட ச்ச' ன்னு இருக்கும்.....

எனக்கு ரவி,ரேணு, பிரசன்னா, Rohit இவங்க நாலு பேரும், இதே ஆர்டர் ல favourite.

ஜூனியர் பாக்குறப்போ, எல்லா குழந்தைகளுமே ரொம்ப நல்லா பாடுற மாறி இருந்துச்சு..irunthaalum கிருஷ்ணமூர்த்தி, Vidyalakshmi (அதே ஆர்டர் ல) favorite. Krish டைட்டில் win பண்ணாரு. இந்த முறை ரவி win பண்றாரான்னு பாக்கலாம்.








Chubby Cheeks.

Chubby cheese
Dimpu cheese
Curly haa

ஏய் அர்ஜுன்..... Rosy Lips??


Teeth within

Curly haa
Veyi faa
Eyesaa boo
Lovvy too
Mummy’s pet…
Is dat you?


Yessssssssssssssssssssssssss

.................................


Original Version here...for the benefit of those who have forgotten:-)



Chubby Cheeks,
Dimple Chin,
Rosy lips,
Teeth within,
Curly hair,
Very fair,
Eyes are blue,
Lovely too,
Mummy's pet...
Is that you?
YES.

இதே மாறி, ringa ringa rosies, baba black sheep, one two buckle my shoe, twinkle twinkle,அம்மா இங்கே வா வா, தோசை அம்மா தோசை...இதுக்கெல்லாம் கூட அர்ஜுன் version இருக்கு....:-)
இப்போ கூட இத நான் type பண்ணிட்டு இருக்கப்போ கூட, என் மடில உக்காந்து 'அம்மா இத தொறந்து தாங்க' ன்னு கேட்டுட்டுருக்கு....:-)

மொதல்ல அம்மா.....அத நான் ignore பண்ணா, ப்ரியம்மா.....அதையும் நான் ignore பண்ணா..ப்ரியா....அதையும் நான் கண்டுக்கலைன்னா.....ஏடீ......:-(

வீட்டுல திடீர்னு ஏதாவது சாமான் (for ex. spoon, fork, ball, chappal, our ID badges...) காணலைன்னா மொதல்ல நாங்க balcony லேர்ந்து எட்டி தான் பாக்குறோம்.....ஏன்னா வீட்டுக்குள்ள அவனால தூக்க முடிஞ்சதெல்லாம் balcony வழியா தூக்கி போட்டுடறது தான் சாரோட hobby.அதுனால இப்போல்லாம் balcony கதவை தொறக்குறதே இல்ல...

அவனுக்கு ஏதாவது வேணும்னா அத ரொம்ப நாசுக்கா கேக்குறது...(for ex: நான் fish fry பண்ணிட்டு இருந்தா....'fish வேணுமா குட்டிக்கு......'......அவனுக்கு கீழ வெளாட போணும்னா ...'அம்மா...கீழ போலாமா....?'.ஆட்டோல போணும்னா....'டிரஸ் பண்ணிட்டு, sweater போட்டு, தொப்பி போட்டு, shoe போட்டு ஆட்டோல போலாமா??' )

sofa ல urine போய்ட்டான்னா....'இவனுக்கு இதே வேலை...' ன்னு எங்க modulation ல சொல்லிட்டு, எதுவுமே நடக்காத மாறி அந்த இடத்தை விட்டு நகர்ந்துடறான்.

கோவம் வந்தா சுவர் ல முட்டிக்குறது....blackmail...

bike ல போறதுன்னா ரொம்ப பிடிக்குது...நைட் ல உருண்டு உருண்டு என்னை நகர்த்தி நகர்த்தி, ஒரு ஓரத்துல ஏதோ போனா போகுது, நீயும் கட்டில்ல படுத்துக்கோ range ல தள்ளிட வேண்டியது...

ஒவ்வொரு நாளும் காலைல ஆபீஸ் கெளம்பும்போது, 'அம்மா, பத்ரமா போயிட்டு வாங்க....சீக்ரம் வாங்க' ன்னு சொல்லிட்டு, நான் கீழ எறங்குறதுக்குள்ள, ஓடி வந்து balcony ல கம்பிய பிடிச்சுக்கிட்டு, நான் போறத பாத்துட்டு இருக்குறத நெனச்சா,
'ச்ச, எதுக்குடா வேலைக்கு போறோம்' ன்னு இருக்கு....சாயங்காலம்(ராத்திரி??) ஆபீஸ் முடிஞ்சு நானோ அவரோ கதவ தொறக்குற சத்தம் கேட்டா, ஓடி வந்து...யாருன்னு பாத்துட்டு 'அம்மா/அப்பா வந்தா...ச்சு' ன்னு சொல்லுறான்.


இப்டி ரகளை தாங்கலை...
அடிக்கடி செக் பண்றேன், வால் ஏதாவது மொளச்சுருக்கான்னு...:-(


Monday 1 December 2008

வார இறுதிக்கு சென்னை சென்று இருந்தோம். நவம்பர் 29th அன்னைக்கு எனது மாமனார் தபால் துறையில் நாற்பது ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அதற்காக அவருக்கு அலுவலகத்தில் பிரிவுபச்சார விழா. எங்கள் குடும்பத்தில் அனைவரும் அவருடைய ஆபீஸ் க்கு போய் இருந்தோம்.எல்லாரும் அவரை வாழ்த்தி பேசி கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் எனது நாத்தனார் வந்திருக்க வில்லை. அவங்க ஒரு பேச்சாளர். என் மனதில், நம்ம குடும்பத்தினர் சார்பாக யாரையாவது நன்றி சொல்ல அழைத்தால், நான் போய் சொல்லலாம் என்று ஒரு எண்ணம். பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு, மைக் பக்கமே போக வில்லை...ரொம்ப out of touch .கண்ணை மூடி ஒரு ரெண்டு நிமிடங்கள் யோசிச்சு ஒரு நிமிடம் பேசுற மாறி சில வரிகள் தயார் செய்து கொண்டேன். அதற்குள் என் நாத்தனார் வந்துவிடவே, வடை பாயசத்தோட விருந்தளிக்க அவர்கள் வந்து விட்ட பிறகு, உப்புமாத்தனமா என் பேச்சு எதுக்குன்னு relax ஆயிட்டேன்....அர்ஜுன் வேறு பசி வந்து ரகளை செய்யவே, நான் விழாக்கூட்டத்தை விட்டு அகல வேண்டியதாகி விட்டது. ...அவங்க எல்லாரும் தப்பிச்சுட்டாங்க.....But you all have no choice.
நான் என்ன பேச நெனச்சேன்னு இங்க எழுதி இருக்கேன்.நீங்க படிச்சு தான் ஆகணும்....:-)

...................................................................................



அனைவருக்கும் வணக்கம்.
எனது மாமனாரை கடந்த மூன்று வருடங்களாக பரிச்சயம்.
நான் அவரிடம் பார்த்து வியந்த விஷயங்கள்...
- அவருடைய எளிமை.

-அடுத்தது, தன் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட, ஒரு பிரச்சினை என்று வரும் போது விவாதம் பண்ணி பெரிதாக்காமல், பிரச்சினைகளை தவிர்த்து விடும் அவருடைய சாதுர்யம்.

-அவருடைய தமிழ் ஆளுமை. ஒரு முறை அவருடைய நண்பர் தொலைபேசியில் தன்னுடைய மகனுடைய திருமண அழைப்பிதழில் அச்சிடுவதற்கு நல்ல வாக்கியங்கள் ஏதாவது சொல்லுமாறு கேட்ட போது, சற்றும் தாமதிக்காமல்

"யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு நேர்ந்ததென்ன??
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன???"
என்று புறநானூற்று வரிகளை அவர் சட்டென்று சொல்ல கேட்டு நான் வியந்து போனேன்.

-அவருடைய English vocabulary skills. தினசரி ஆங்கிலம் பேசும் எங்களுக்கு எல்லாம் தெரியாத பல வார்த்தைகள் அவருக்கு சர்வ சாதாரணம்.எனக்கு திருமணம் ஆன புதிதில் எங்க wedding DVD பார்த்து கொண்டு இருந்தோம்.அதில் 'Best complements from Kith And Kin' என்று ஒரு வார்த்தை வந்தது. Kith And Kin என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை எனக்கோ என் கணவருக்கோ தெரிய வில்லை. 'சுற்றமும் நட்பும்' என்று ஒரு போடு போட்டார் என் மாமனார். நான் அசந்துட்டேன்.

- அவருடைய வேலையின் மீது அவருக்கு இருக்கும் dedication. நானும் என் கணவரும் IT துறையில் வேலை செய்கிறோம். அதிக வேலை பளு இருக்கும் நேரங்களில், வழக்கத்தை விட அதிகமான நேரம் அலுவலகத்தில் செலவிட நேரும் போது, ரொம்ப அலுத்துக்குவோம். ஆனால், being a PRI, மாங்கு மாங்கு ன்னு வெயிலும், மழையிலும் அலைந்து திரிந்து வேலை செய்து விட்டு வந்தாலும் ஒரு நாள் கூட தன் வேலையை பற்றி ஒரு அலுப்பு அவரிடம் தென் பட்டதே இல்லை...

'தனக்கு மாதா மாதம் சம்பளம் தரும் வேலை' என்பதை தாண்டி தபால் துறை மீது அவருக்கு ஒரு ஈடுபாடு இருப்பது உண்மை. கடந்த வருடம் நாங்க டென்மார்க் ல இருந்தப்போ ஒரு மூணு மாதம் அவர் அங்கே வந்து இருந்தார். அப்போ நாங்க வெளில செல்லும் போது, எங்க போஸ்ட் ஆபீஸ் அல்லது போஸ்ட் பாக்சை பார்த்தாலும் அவர் ரொம்ப உற்சாகமாகி விடுவார்.எங்க வீட்டுக்கு போஸ்ட் டெலிவரி பண்ண வரும் ஒரு போஸ்ட் வுமனை friend ஆக்கி கொண்டு, அங்க உள்ள போஸ்ட் ஆபீஸ் க்கு சென்று, அவர்களின் செயல் முறைகள் எல்லாத்தை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டு, நிறைய புகைப்படங்கள் எல்லாம் எடுத்து வந்தப்போ அவருடைய அந்த ஈடுபாடு ரொம்ப evident ஆ தெரிஞ்சுது.

அவருக்கு இந்த நாற்பதாண்டு கால அழகான அனுபவத்தை தந்த தபால் துறைக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அவர் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். ஆனால் எனக்கு கடவும் நம்பிக்கை நிறைய உண்டு. அவருடைய ஓய்வுக்காலம் அமைதியுடன் அமைய கடவுளை பிரார்த்திக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
..................................................................................

நான் எப்டி 'எங்க அப்பா இல்லன்னா நான் இன்னைக்கு இப்டி இல்ல' ன்னு சொல்லுவேனோ, அதே மாறி என் நாத்தனார், என் மாமனாரை பத்தி சொல்லுவாங்க....
அர்ஜுன் க்கு என் அப்பாவிடம் ஆங்கிலம் படிக்க குடுத்து வைக்கலைன்னு இதுக்கு முன்னால் ஒரு post ல சொல்லி இருந்தேன். ஆனா என் மாமனாரிடம் தமிழ் படிக்க குடுத்து வைத்து இருக்கிறான்.

.....................................................................................

And this post is undoubtedly dedicated to(No prizes for guessing) my Father in law, as a small gift for his retirement. This is wishing for him, peace,health and happiness today and everafter.

..................................................................................



பின்னால் சேர்த்தது 07Jan2009
சமீபத்தில் என் கணவர் இந்த பதிவை என் மாமனாரிடம் காட்டி இருக்கிறார்.அவர் குடுத்த கமெண்ட்:
"மொதல்ல அந்த பாட்டு புறநானூறு இல்ல...அடுத்தது lyrics மொத்தமும் தப்பு....இத படிச்சவங்க யாரும் சுட்டி காட்லையா???"
மானம் போச்.சொன்னதோட இல்லாம ஒழுங்கான வரிகளை எழுதி குடுத்து இத மாத்திடுன்னும் சொன்னாரு.அந்த வரிகள் இதோ:
"யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
--- குறுந்தொகை -40

Friday 28 November 2008

யாக்கை திரி, காற்றின் மொழி...

சமீபத்தில் ஒரு நண்பரிடம் யாக்கை திரி பாடல் பற்றி பேச நேர்ந்தது.
வைரமுத்து இந்த பாட்டை எழுதி இருக்கும் விதமும்(in his பெய்யென பெய்யும் மழை), அந்த பாட்டுக்கு ARR போட்ட composition உம்(Yes, this is one of the very few பாட்டுக்கு மெட்டு போட பட்ட privileged songs), மணிரத்னம் அதை உபயோகப் படுத்தி இருக்கும் லாவகமும் யாரையுமே கவரும்....நெனச்சு நெனச்சு சந்தோஷ பட்டுக்கலாம். எப்போ
கேட்டாலும் உற்சாக படுத்தும் பாட்டு.

ஆயுத எழுத்து ஆடியோ ரிலீஸ் ஆனப்போ, visuals ஐ ரொம்ப expect பண்ண வெச்ச பாட்டு எனக்கு இது தான்.
படம் வந்த அப்றோம், மத்த எல்லா பாட்டும் டிவி ல போடுவாங்க, ஆனா இந்த பாட்டு மட்டும் வரவே வராது....ரொம்ப காக்க வெச்ச பாட்டு....

ஆனா ஒரு சோகமான உண்மை என்னன்னா......சிலர் இந்த பாட்டோட அருமையான lyrics ஐ அனுபவிக்காம, வெறுமே இசையை மட்டும் ரசிச்சது தான்.
அவங்களுக்கு எல்லாம் (AR)Rehmania....:-)
யாக்கை ன்னா உடல் ன்னு அர்த்தம்.
உடலை திரியாக்கி காதலை சுடராக்கிய வைரமுத்துவுக்கு இந்த rehmania மேட்டர் தெரிஞ்சா அழுதுடுவாரா இருக்கும்....:-(


நான் எங்கயோ படிச்ச ஞாபகம். 'ஒரு கவிஞர் ரொம்ப ரொம்ப ரசிச்சு ரசிச்சு 'a drop of crocodile on the wall' ன்னு தன்னோட ஆங்கில கவிதை ல எழுதினாராம்.அதை படிச்சவங்கள்லாம் 'என்னங்க சொல்ல வரீங்க? புரியலையே' ன்னு சொன்னங்களாம்.
அதுக்கு அவர், "அட பாவி மக்கா...'பல்லி'ய(Lizard) தான் அவ்ளோ நுணுக்கமா எழுதி இருக்கேன்னு சொன்னாராம்'...பாவம் அவருக்கு எப்டி இருந்து இருக்கும்??

'மொழி'படத்துல 'காற்றின் மொழி' பாட்டு எல்லாருக்கும் பிடிக்கும்....அதுல ஒரு நுணுக்கமான மேட்டர் இருக்கு....நெறைய பேரு கவனிச்சு இருப்பீங்க...
அதுல நடுவுல BGM வர எடத்துல, ஒரு zebra crossing வரும்....அங்க Jo வந்து Prakashraj, Prithviraj, Swarnamaalya மூணு பேர் கிட்டயும் ஒரு action பண்ணுவாங்க
உடனே அவங்க மூணு பேரும் அந்த zebra crossing ல காலை மாத்தி மாத்தி ஒரு step போடுவாங்க.அந்த zebra crossing ஐ Keyboard ஆகவும், ஆடுற அந்த மூணு பேரை விரல்களாகவும் அந்த deaf and dumb பொண்ணு கற்பனை பண்ணுறது எவ்ளோ ஒரு அழகு...:-)

"ரொம்ப பெருமையா பொறந்த நாள் கொண்டாடிட்டு என்ன அதுக்கு அப்றோம் ஒண்ணையும் காணும்.... காணும்?" ன்னு எல்லாரும் கேவலப் படுத்துறாங்களேன்னு ஏதோ ஒண்ணு பதிஞ்சாச்சு.

With that I wish you all a very very happy weekend.

Saturday 15 November 2008

Happy Birthday Synapse..:-)



Synapse க்கு இன்னைக்கு மொத பொறந்த நாள்....



போன வருடம் இதே நாள், Sweden ஆபீஸ் ல உக்காந்து முதல் பதிவு எழுதி publish பண்ணப்போ, I did not have a clue how blogging would be.

என் friend சுபாஷினி நான் blog ஆரம்பிச்சப்போ சொன்னா....'ஆரம்பத்துல இருக்குற அந்த வேகத்தை maintain பண்றது பெரிய challenge, வேகமா நெறைய பதிவு எழுதுறத விட consistent ஆ தொடர்ந்து எழுத முயற்சி பண்ணு' ன்னு...
ஒரு வருஷமா consistency maintain பண்ணியாச்சு....இனியும் பண்ணனும் ன்னு ஆசை இருக்கு....முயற்சி பண்றேன்.

இந்த பதிவு எனக்கு பின்னூட்டம் போட்டு,தனி மடல் அனுப்பி(இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்...ஒடம்பு ரணகளமா ஆயிருக்கு...:-)...) உற்சாகம் குடுத்துட்டு இருக்க எல்லாருக்கும் dedicate பண்ண படுகிறது...

On this day, I wish and pray for you all, a healthy and peaceful life(என்னை பொறுத்த வரைக்கும் health உம், peace உம் இருந்தா மத்த எல்லாம் தன்னால வந்துடும்.) and ofcourse a very very happy reading:-)...

Monday 10 November 2008

பனை மரக்காடே! பறவைகள் கூடே! மறுபடி ஒருமுறை பார்ப்போமா?

தமிழ் திரையுலகம் இலங்கை பிரச்சினையை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த அன்னைக்கே இத பத்தி எழுதணும் ன்னு நெனச்சேன். எப்டியோ விட்டு போச்சு....ஆனா இன்னைக்கு இந்த போஸ்ட் படிச்சதும், இத பத்தி கண்டிப்பா எழுதணும் ன்னு தோணுச்சு.


நாங்க டென்மார்க் ல இருந்தப்போ, அங்க நெறைய இலங்கை தமிழர்கள் இருந்தாங்க. நாங்க ஒரு srilankan store ல தான், groceries எல்லாம் வாங்குவோம்.
பார்த்தீபன் ன்னு ஒருத்தர், என் கணவருக்கு colleague. இலங்கை பிரச்சனையால் அங்க இருந்து சில வருஷங்களுக்கு முன்னால் இடம் பெயர்ந்து டென்மார்க் ல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாரு. அவரோட மனைவி, அவங்க சின்ன புள்ளயா இருக்கப்போவே அவங்க அம்மா, அப்பா எல்லாருமே இந்த பிரச்சனையால் இடம்பெயர்ந்து லண்டனுக்கு போய்ட்டாங்களாம். பார்த்தீபனுக்கும் அவங்களுக்கும் திருமணம் ஆனதுக்கு பிறகு அவரோட மனைவியும் டென்மார்க் வந்துட்டாங்க. எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு. அர்ஜுன் பொறந்து இருந்தப்போ எங்க வீட்டுக்கு அவனை பாக்க வந்தாங்க.... வந்ததும் 'நான் அவனை தூக்கட்டுமா?" ன்னு கேட்டு அர்ஜுன் ஐ எடுத்து மடியில் வெச்சு கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க....அர்ஜுன் க்கு ஏக பட்ட gift வாங்கிட்டு வந்துருந்தாங்க. அவங்க பொண்ணுக்கு ரெண்டு வயசு, ரொம்ப துறு துறுன்னு அழகா இருப்பா..... எங்க அம்மா அவங்களுக்கு பஜ்ஜி செஞ்சு குடுத்தாங்க.... நாங்க எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம்... அந்த குட்டி பாப்பா எங்க அம்மாவை, அம்மம்மா அம்மம்மா ன்னு சிலோன் ரேடியோ ல வர்ற மாறி கூப்பிட்டுகிட்டு இருந்தா......ரொம்ப கல கலன்னு பேசிக்கிட்டு இருந்தோம்....

திடீர்னு பார்த்தீபன் மனைவி 'நீங்க எப்போ இந்தியா போறீங்க?' ன்னு கேட்டாங்க ....அப்போ அர்ஜுன் பொறந்து ஒரு வாரம் ஆயிருந்துச்சு.... 'டாக்டர் ஒரு மாசம் கழிச்சு தான் flight ல கூட்டிட்டு போலாம் ன்னு சொன்னாரு, அதுனால அடுத்த மாசம் போறோம் " ன்னு சொன்னேன்.
உடனே அவங்க அவங்க மடில இருந்த அர்ஜுனை கையில் எடுத்து அவன் கிட்ட பேசுற தொனியில் அவனை hold பண்ணிக்கிட்டு, "நீ அதிர்ஷ்டக் காரன், பொறந்து ஒரு மாசத்துல சொந்த நாட்டுக்கு போற.....நான் என் நாட்டை விட்டு வந்து பதினெட்டு வருஷம் ஆகுது, இன்னும் திரும்பி போக முடியலை' ன்னு சொன்னாங்க....எங்க எல்லாருக்கும் சாப்பிட்டுக்கிட்டு இருந்த பஜ்ஜி தொண்டைலையே சிக்கிடுச்சு...எல்லாருக்கும் ஒரு நிமிஷம் கண் கலங்கி அந்த situation ரொம்ப கனமா ஆயிடுச்சு...எல்லாருமா சேந்து எப்டியோ சமாளிச்சு பழைய நெலமைக்கு வந்தோம்.....

இலங்கை பிரச்சனை பத்தி படிச்சு, டிவி ல பாத்து நான் உணர்ந்தத விட, அன்னைக்கு அவங்க சொன்ன அந்த ஒரு வரியில் நானும் அவரும் அம்மாவும் உணர்ந்தது அதிக வலி.

பார்த்தீபன் அதுக்கு அப்றோம் தான் சொன்னாரு, அவங்க அம்மா, அக்கால்லாம் இன்னும் திரிகோண மலை பகுதில தான் இருக்காங்களாம். அங்க ரொம்ப சண்டை நடக்குறாதால அவர வரவே வேணாம் ன்னு சொல்லிட்டாங்களாம்.....'அவங்களை எல்லாம் பாத்து பல காலம் ஆயிடுச்சுன்னு' சொன்னாரு....

இந்தியா-இலங்கை கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்போ, என் கணவர் கவனித்து இருக்கிறாராம்....பார்த்தீபன் இலங்கை க்கு பயங்கரமா சப்போர்ட் பண்ணுறதை.....ஆனா அந்த நாட்டு அரசாங்கம் அவங்களை எல்லாம் அந்த நாட்டு பிரஜைகளா நடத்த போறது என்னைக்குன்னு தான் தெரியலை....

Friday 7 November 2008

நிலா! நிலா!

சென்ற முறை அம்மா வீட்டுக்கு போனப்போ, ஒரு பழைய டைரி கெடைச்சுது.
நான் 12th படிக்குறப்போ, என்னோட competitions க்கு prepare பண்ற materials எல்லாம் எழுதி வெக்குற டைரி.
ஒரு on the spot கவிதை போட்டிக்கு எழுதின கவிதை(???).
சந்திராயன் பற்றி படிக்கும் போது இது தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு...
சின்ன புள்ள தனமா இருக்கு??? ன்னு யாரும் கேக்க கூடாது....சொல்லிட்டேன்.



நிலா
-------
வெள்ளி நிலவே....உன் விருப்பம் போல சிரிக்கிறாய்...
வான்வழி செல்லும் ராஜகுமாரியாய் விண்ணில் பவனி வருகிறாய்...

என்ன மந்திரம் செய்தாய் நீ?
எங்கள் வீட்டு பிள்ளை சோறுண்ண உன்னை கேட்கிறது...

மக்கள் தொகை பெருக்கத்தால்
எங்கள் பூமித்தாய் மட்டும் பாரம் தாங்காமல் நசுங்க...
நீர்,வளி இல்லாததால் நீ மட்டும் சுதந்திரமாய் !!!

ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் தானா?
நாளை யாம் அனைவருமே உன்னில் குடியேறி
வெற்றி கொடிஏற்றத்தான் போகிறோம்....
காத்திரு கவின் நிலவே!
வளர்பிறையாய்!!!
பௌர்ணமியாய்!!!!!!
-------------------------------------------------------




பாட்டு போட்டி.

இந்த லிரிக்ஸ் எந்த பாட்டுல வருது சொல்லுங்க பாப்போம்....கூகிள் பண்ணாம சொல்லணும் அதான் போட்டி...
clue இந்த line லேயே இருக்கு.

"அணைக்கும் ஆசை ஆயிரம்.. கலைக்கும் பாஷை பாசுரம்..
சுரம் ஏழிலும்.. சுவை ஆறிலும்...... "

Thursday 30 October 2008

ஸ்பெஷல் பதிவு !!!

'உங்களை பாத்து எனக்கும் எழுதணும் ன்னு தோணுது' ன்னு கிரண் முதலானவர்கள் சொல்றப்போ,

"சின்மயி, ஜெயஸ்ரீ இவங்க பதிவு எல்லாம் படிச்சு படிச்சு எனக்கும் blog எழுதணும் போல இருக்கு" ன்னு நான் சொல்ல, "hey whom should I pity for? you or the ones who will read ur blogspot?" ன்னு அவர் கேட்டது ஞாபகம் வருது.

எனக்கு வரும் தனிமடல்கள் பாக்குறப்போ, ஜெயஸ்ரீ க்கு மெயில் அனுப்பிட்டு, பதில் எழுதுவாங்களா ன்னு inbox ஐ refresh பண்ணி பண்ணி பாத்துட்டு இருந்துச்சு ஞாபகம் வருது.

மணிகண்டன் தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டப்போ, "நம்மளையும் மதிச்சு ஒருத்தர் கூப்பிடுறாரே" ன்னு தோணிச்சு.மணி சார், அந்த ஆட்டம் ரொம்ப out of fashion ஆயிடுச்சு போல...எந்த பதிவுக்கு போனாலும் அது தான் இருக்கு....இப்போ எழுதினா, சன் டிவி ல வர்ற "காவிய புதன்", "75 ஆண்டு தமிழ் சினிமா" மாறி இருக்குமோன்னு பயமா இருக்கு......

இட்லிவடை பதிவு எழுதி தர சொன்னப்போ, "நம்ம எழுதுற உப்புமா பதிவு எல்லாம் இட்லிவடை ல வர்ற அளவுக்கு ஆயிடுச்சா?" ன்னு இருந்துச்சு.

பாஸ்டன் பாலா மாதிரி பெரியவங்கல்லாம் நம்ம பதிவுக்கு follower ஆனப்போ, "நெசமா தானா?" ன்னு அவர்கிட்ட கேக்கணும் ன்னு இருந்துச்சு.

இப்படியான நம்ம பதிவுலக 'tenure' ல நம்மள எல்லாம் பாத்து impress ஆயி, ஒருத்தங்க ஒரு பதிவு எழுதி அத நமக்கு dedicate பண்றாங்கன்னா....விட்ருவோமா? உடனே அத ஒரு பதிவா போட்டு நமக்கு ஒரு publicity create பண்ணிக்காம....அத விட என்ன வேலை?moreover, இது நம்ம ஐம்பதாவது பதிவு வேற...:-)

இவங்க பக்கத்தை படிக்குறதே பெரிசு....இதுல யார்றா அந்த வேலையத்த ஆளு....dedicate லாம் பண்ணிக்கிட்டு ன்னு நெனைக்கறவங்களுக்கு,

அது வேற யாருமில்ல....நம்ம ராஜி தான். இது வரைக்கும் பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கிட்டு இருந்தவங்க, இப்போ தமிழ் பதிவு ஜோதியில் ஐக்கியம் ஆக முடிவு பண்ணிருக்காங்க....அதுவும் PG ல system இல்லாதனால, ஆபீஸ் ல உக்காந்து எழுதினாங்களாம்... ராஜி, வீட்டுல system இருந்தாலும் நாங்கல்லாம் ஆபீஸ் ல உக்காந்து தான் blog எழுதுவோம்....பின்ன, வீட்ல வேலை பாக்க வேணாமா??

அவங்களோட மொத பதிவு, நல்லாவே இருக்கு...படிங்க......



Priya – Ungal yezhuthil impress aagi.. ungalin rasigai aagi.... ungala mathiri naan yezhutha try panninen…. Yellam ungalin asirvadam

Naan thirumbi thirumbi padikka padikka neraiya thirutthangal seiya thondrugirathu…

This is dedicated to Priya Kathiravan J J J Thanks for making me to write this. I am staying in PG. don’t have system in my room. So stretching back at office and writing this. I m so much impressed with your writings. Thanks a lot

தீபாவளி …. எல்லோரும் அவங்க அவங்க ஊருக்கு போவாங்க … கூட்டமாக இருக்கும் .. Traffic வேற அதிகமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்த வேளையில் வெள்ளிக்கிழமை human chain என்று அறிவிக்கப்பட்ட உடன் மிக புத்திசாலி தனமாக call taxi book பண்ணினோம் மாலை 5 மணிக்கு office இல் இருந்து CMBT செல்ல..

Friday Morning office க்கு 6.30 மணிக்கே சென்று விட்டேன் ... மாலை சீக்கிரமாக புறப்பட வேண்டுமே L L .. மிக வேகமாக work செய்தேன் (கொஞ்சம் over ஆ தான் இருக்குன்னு எனக்கு தெரியுது).. human chain ஆல் traffic என்று எனக்கு news கிடைத்த போது மணி 2.30 … நாம தான் call taxi book பண்ணி இருக்கோமே என்று திமிராக work பண்ணிக்கிட்டு இருந்தேன். வருண பகவானுக்கு பிடிக்க வில்லை போலும்… மழை கொட்ட ஆரம்பித்து விட்டது… நாங்களும் work முடித்து விட்டு 4.30 மணிக்கே call taxi க்காக wait பண்ண ஆரம்பித்து விட்டோம்… 4.45 மணிக்கு சென்னை landline number இல் இருந்து oru call… ஆஹா நம்ம வண்டி வந்தாச்சு என்று சந்தோசமாக call ஐ attend பண்ணினேன். Sorry madam எல்லா Car ம்ம் traffic இல் மாட்டி கொண்டது.. எங்களால வர முடியல, நீங்க வேற arrange பண்ணிக்கோங்க என்று சொல்ல வேற வழி இல்லாமல் phone ஐ cut செய்தேன்…. நாங்க நாலு பேருங்க.. சரி நாம auto la போகலாம் என்று முடிவுக்கு வந்த போது மணி 5.20.

Office இன் முன் இருக்கும் auto எடுக்கலாம் என்று auto drivers இடம் கேட்க நான்கு பேர் மறுத்து ஒருவர் மட்டும் ஒத்துக்கொண்டார். சரி எவ்வளவு fair என்று கேட்க 550 rupees என்று சொல்ல வாய் அடைத்து போய் நின்றோம். Chennai ல இருந்து எங்க ஊருக்கு போயிட்டு வரவே 400 rupees தானே ஆகும் என சொல்லி கொண்டே driver இடம் பேச ஆரம்பித்தோம்… எங்களுக்கு வாத திறமை இல்லை போலும் 500 rupees ku முடிவானது.. அடுத்ததாக வந்த சோகத்தை பாருங்கள். நீங்கள் மூன்று பேர் தான் வர முடியும் என்று auto driver சொல்ல எங்களால் ஒன்றும் பண்ண முடியவில்லை. எனக்கு தான் 10.45 மணிக்கு bus. மற்ற அனைவருக்கும் 10 மணிக்கு முன்னால். வேறு வழிஇல்லாமல் நான் ஒதுங்கி கொள்ள எனது நண்பர்களின் பயணம் இனிதே !!!!! தொடங்கியது. மணி 5.45 .. என்ன செய்வது என்று யோசித்தேன் .. 500 rupees கொடுத்து நம்மால் போக முடியாது சரி office bus இல் போகலாம் என்று முடிவு செய்து 6.15 க்கு office bus இல் ஏறினேன்.. Sholinganallur இல் இருந்து life line hospital க்கு இருபது நிமிடத்தில் சென்று விட, என் நண்பர்களுக்கு phone செய்தேன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள.. அவர்கள் tidal பக்கத்தில் traffic இல் மாட்டி கொண்டார்கள் என்று அறிந்து, நான் தப்பித்தேன் என்று நினைத்து கொண்டு சிரித்தேன் நானும் traffic இல் மாட்டி கொண்டேன் என்பதை அறியாமல்.. call ஐ cut செய்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் எங்கள் bus traffic க்கில் சிக்கி நின்று கொண்டு இருந்தது. வருண பகவானின் வேகம் குறைந்து விட்டது. ஆனால் எங்களது bus அடி மேல் அடி வைத்து நடப்பது போல் நகர்ந்து கொண்டு இருந்தது. ஒரு வழியாக 8.15 க்கு Velachery போய் சேர்ந்து விட்டோம். இதற்கு பிறகும் bus ல போனா Saturday காலை தான் bus stand போக முடியும் என முடிவெடுத்து bus இல் இருந்து இறங்கி கொண்டேன். இதற்கு இடையில் எனது நண்பர்கள் call செய்து நான் எங்கு இருக்கிறேன் என்று உறுதி படுத்தி கொண்டு இருந்தனர்.

இங்கு தான் நான் புத்திசாலிதனமாக யோசித்தேன். Travels ku call பண்ணி நான் Tambaram stop இல் ஏறி கொள்கிறேன் என்று சொல்லி விட்டு நான் tambaram போய் விடலாம் என்று நினைத்தேன். As usual their number s busy. முயன்று முயன்று பார்த்து விட்டு எனது அண்ணனுக்கு phone செய்தேன். அவரு perungalathur la தான் yeruvaru. ஏன்டா call பண்ணினோம்னு ஆய்டுச்சு. உனக்கு CMBT தான் boarding point. நீ அங்க இல்லனா கண்டிப்பா உன் ticket a வேற யாருக்காவது கொடுத்துடுவாங்க என்று சொல்லி என்னை CMBT நோக்கி விரட்ட வேறு வழி இல்லாமல் நான் auto தேடினேன். ஒரு இருபது auto வர முடியாது என்று சென்று விட 25 min ku அப்புறம் ஒருவர் சரி என்று சொல்லு thanks என்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவர் அடுத்ததாக ஒரு punch கொடுத்தாரு. CMBT போக Velachery இல் இருந்து 300 rupees வேண்டும் என்றார். என்னால் ஓரளவிற்கு மேல் பேரம் பேச முடியல. எனக்கு பின்னாடி ஒரு ஏழு எட்டு பேர்இந்த auto வேண்டும் என்று wait பண்ணி கொண்டு இருந்தார்கள். வேறு வழி இல்லாமல் சரி என்று auto வில் எனது பயணம் 8.50 மணிக்கு தொடங்கியது. Guindy வரை traffic இல்லை. ஒரு வழியாக Guindy வந்தடைதேன். Bus ஆவது Velachery வரை நகர்ந்தது. இங்கு auto 40 min நின்று விட்டது. Saidapet போய் Vadapalani வழியாக CMBT போகலாம் என்று driver ku ஐடியா கொடுத்தேன். சரி என்று அவர் ஒத்து கொண்டார். ஒரு வழியாக auto Guindy ல இருந்து நகர ஆரம்பித்த போது மணி 10.05. Saidapet route il auto செல்ல anga traffic ye இல்ல. எனக்கு சந்தோசமாக இருந்தது. 25 நிமிட பயணம். Auto vadapalai ஐ வந்தடைந்தது. ஆகா மறுபடி traffic MMDA பக்கத்தில். Auto நகரவே இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை bus மற்றும் auto தான். MTC bus இல் இருந்த நிறைய பேர் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார்கள். CMBT கு பக்கத்தில் இருந்த என் நண்பர்களும் நடக்க ஆரம்பித்து விட்டார்கள் என எனக்கு phone செய்தார்கள்.

மழை தண்ணீர் இல்லை இல்லை சாக்கடை தண்ணீர் தான் ரோடு முழுவதும். அதில் இறங்கி நடக்க மனம் இல்லாமல் நான் auto வில் பயணத்தை தொடரலாம் என்ற முடிவில் auto வில் இருந்து இறங்காமல் இருந்தேன். Auto நகர ஆரம்பித்தது. ஒரு வழியாக 30 நிமிடத்தில் CMBT பக்கத்தில் வந்து sernthathu. மணி 11 ஐ தொட இதற்கு மேலும் பொறுமை இல்லாமல் நான் auto வை cut செய்து அனுப்பினேன் (300 rupees கொடுத்து தாங்க)

நான் நடக்க ஆரம்பித்து (of course சாக்கடை ல தான்) private bus stand ஐ அடைந்த போது மணி 11.20. நன்றாக திட்டு வாங்க போறோம் என்று நினைத்து கொண்டு travel office சென்று 10.45 பஸ் எப்போ வரும் என்று விசாரிக்க அவர் என்னை மேலும் கீழுமாக பார்த்து விட்டு அங்கிருந்த பயணிகள் பக்கம் திரும்பி 8.30 bus லாம் ஏறுங்க என்று கத்த சிரிப்பை அடக்கி கொண்டு அவரின் பதிலுக்காக காத்து கொண்டு இருந்தேன். போயிட்டு ஒரு மணி நேரம் கழித்து வாம்மா என்று சொல்ல எனது நண்பர்களுக்கு phone செய்தேன். அவர்களுக்கும் இதே நிலைமை. சரி என்று அவர்கள் கூட சேர்ந்து நின்று கொண்டு இருந்தேன். ஒரு வழியாக எனது bus முதலில் வந்தது. மணி சொல்ல மறந்துட்டேனா.. மணி அப்போ 12.50 (Saturday start aiduchu) .. அதற்குள் எனது அண்ணன் முப்பது தடவை call செய்து விட்டான் bus வந்து விட்டதா இல்லையா என்று தெரிந்து கொள்ள. என் மீது பாசம் என்று நினைபவர்களுக்கு ஒரு விஷயம். அவரு 11.30 இல் இருந்து perungalathur office il wait பண்ணிக்கொண்டு இருந்தார். அது தான் ரொம்ப அக்கறை J J J …அன்று தான் நான் ரொம்ப feel பண்ணினேன் ஏன்டா இவனுக்கு CUG number போட்டு கொடுத்தோம் என்று…

Bus நகர ஆரம்பிக்க அப்பாடா என்று நினைத்து கொண்டேன்.. அப்போது தான் பசி தெரிய நான் சாப்பிட வில்லை என்று நினைப்பு எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நான் தூங்க முயன்றேன் என் பசி ஐ மறக்க ... ஆனால் எங்க அண்ணனுக்கு யாரு update பண்ணுறது ... இதோ வந்துட்டோம் இதோ வந்துட்டோம் என்று என் அண்ணனுக்கு சொல்லி கிட்டே perungalathur போய் சேர்ந்த போது மணி 2.40. ஒரு வழியாக traffic clear ஆகி 5 மணிக்கு செல்ல வேண்டிய என் வீட்டுக்கு 9.30 மணிக்கு சென்றடைதோம்…இப்படி ஒரு deepavali பயணம் இனி தேவை இல்லை என்ற நினைப்பு வந்து விட்டது..

யாரை குறை சொல்ல……

வருண பகவனையா?

நமது கஷ்டத்தை சாதகமாக்கி கொண்ட auto driver kalaiya?

Tired a irukkunu solli Saturday full a thoongithu thani kathai

Wednesday 29 October 2008

ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி BMTC பஸ் ல ஏறினேன். நான் எறங்க வேண்டியது just ரெண்டு stops தள்ளி. 5Rs டிக்கெட் cost. கண்டக்டர் கிட்ட அஞ்சு ரூபாவை நீட்டுனேன். அவரு டிக்கெட் குடுப்பாருன்னு எதிர் பாத்தா , ரெண்டு ரூபா மீதி குடுத்துட்டு பேசாம போய்ட்டாரு. 'ஒரு வேளை, சாதா பஸ், ஸ்பெஷல் பஸ் மாறி இருக்கும் போல....இந்த பஸ் ல மூணு ரூவா தான் டிக்கெட் போல' ன்னு நெனச்சுட்டு 'அவர் அவசரத்துல டிக்கெட் குடுக்காம போயிட்டாரோ என்னவோ, செக்கிங் ஏதும் வந்துற போறாங்க' ன்னு தவிப்பா இருந்தேன். நடுவுல ஒரு சிக்னல் ல கொஞ்சம் பேரு ஏறினாங்க. அவங்களுக்கு டிக்கெட் குடுக்க வந்தப்போ தான் கவனிச்சேன். யாருக்குமே அந்த ஆளு டிக்கெட் குடுக்கலை....என் stopping பேரு சொல்லி டிக்கெட் கேட்ட எல்லாருக்குமே, 2Rs மீதி குடுத்துட்டு போய்ட்டாரு.அப்போ தான் எனக்கு மேட்டர் வெளங்கிச்சு....அதாவது அந்த அஞ்சு ரூவாக்கு கணக்கு இல்ல......no ticket. 60-40 ன்னு அவரா ஒரு (அ)நியாய கணக்கு போட்டு மூணு ரூவா அவருக்கு, ரெண்டு ரூவா passenger க்கு பிரிச்சு குடுக்குறாரு. எனக்கு தாங்கலை...


BMTC பஸ் ல பயணம் செய்றது எதுக்கு சமம் ன்னு அதுல பிரயாணம் பண்ணவங்களுக்கு தான் தெரியும்.2002 செப்டம்பர் ல இருந்து 2004 மே வரைக்கும், BTM ல வாசம். ஆபீஸ் domlur ல...அப்போல்லாம் ஆட்டோ என்பது எனக்கு அவசரத்துக்கு மட்டும். அதோட, ரிங் ரோடு ல ஆட்டோ ல தனியா போகாதேன்னு நெறைய பேரு அட்வைஸ் பண்ண போக, கஷ்டமா இருந்தாலும் எப்போதும் BMTC யிலேயே போவது வழக்கம்,
201G,205,411,412 இந்த பஸ் ல எல்லாம் ரெண்டு வருஷம் travel பண்ணதுல BMTC conductors கிட்ட நெறைய கசப்பான அனுபவங்கள் எனக்கு உண்டு.....அதுனால அந்த கண்டக்டர் கிட்ட ஏதும் கேக்குறதுக்கும் திகிலா இருக்கு.....ஆனா அத அப்படியே விட்டுட்டு போறதுக்கும் மனசு இல்ல...அந்நியன் கிளைமாக்ஸ் ல சுஜாதா எழுதின மாறி, இப்படி டெய்லி அஞ்சு அஞ்சு ரூவாயா.....etc etc...government ஐ ஏமாத்தினா.....அப்டின்னு மனசுக்குள்ள குமுறிட்டேன். next ஸ்டாப் வந்துச்சு, அதுக்கு அடுத்த ஸ்டாப் ல நான் எறங்கனும். இந்த stop ல ஏறினவங்களுக்கு ticket குடுக்க அந்த ஆளு வந்தாரு. அவரு குடுத்த ரெண்டு ரூவாயை எடுத்து அவர்கிட்ட நீட்டி,"பேடா, நன்கே 5Rs ticket கொடி"ன்னு சொன்னேன். நான் கேட்பதாய் நெனச்சு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேனா இல்ல அவருக்கு கேக்கலையா தெரியலை..... கேட்டதையே காதுல வாங்காத மாறி போயிட்டாரு....எனக்குள் இயலாமை பொங்கியது.....ஆனா உண்மையில் என்ன செய்வதென்று தெரியலை....எனக்கு இதற்கு முன் ஏற்பட்ட BMTC அனுபவங்கள் என்னை ஏதும் பேச விடவில்லை...பேசாமல் இறங்கி வந்துட்டேன். ஆனால் மனதில் இன்னும் லேசான வருத்தம் இருக்க தான் செய்கிறது.

டென்மார்க் போறதுக்கு முன்னாடி நான் கூட, fake medical bills எல்லாம் submit பண்ணிருக்கேன், tax exemption காக. ஆனா அங்க உள்ள system பார்த்துட்டு(அப்படி ஒரு trust..... government வந்து யாரையும் tax கட்டுங்கன்னு கேக்குறதில்ல...மக்கள் லாம் அவங்களே ஒழுங்கா கட்டுறாங்க... அதுனால தான் அவ்ளோ பணக்கார நாடா இருக்காங்க....) நானும் அவரும் முடிவு பண்ணோம், இனி எந்த காரணத்துக்காகவும் 'ஒரு சல்லி காசு ஏமாத்தக் கூடாதுன்னு'.

எங்க things லாம் சென்னை ல இருந்து பெங்களூர் move பண்றப்போ, packers and movers கேட்ட மொத கேள்வி, "பில் எவ்வளவு ரூபாய்க்கு வேணும்?"
"உள்ள amount க்கு குடுங்க, எக்ஸ்ட்ரா ஏதும் போட வேணாம்" ன்னு சொன்ன எங்களை "சரியான கேனையனா இருப்பாய்ங்க போலிருக்கு" ங்குற மாறி ஒரு பார்வை பார்த்தாங்க...

furnitures வாங்க போனா, "bill இல்லாம தரோம், அப்போ நீங்க VAT pay பண்ண வேணாம்...ஆனா guarantee க்கு எந்த problem ம இல்லாம பாத்துக்குறோம்" ன்னு சொல்லுறாங்க...
"வேணாம், VAT குடுத்தே வாங்கிக்கிறோம், bill போடுங்க" ன்னு சொன்னா எரிச்சலா பாக்குறாங்க.

எலக்ட்ரானிக்ஸ் கடைல ,"cash pay பண்ணுங்க, discount தரோம் " ன்னு சொல்லுறாங்க. "card ல pay பண்றோம், discount வேணாம்" ன்னு சொன்னா, "லூசாய்ய்யா நீ" ன்னு கேக்காம பாக்குறாங்க....

"எல்லாரும் tax கட்டிண்டு தான் இருக்கா, அவஸ்தை பட்டுண்டு தான் இருக்கா"
"எல்லாரும் செய்றதுனால தப்பு சரியா ஆயிடாது நந்தினி"

எனக்கு மிக மிக பிடித்த சுஜாதாவின் வசனம். அட்லீஸ்ட் நம்ம ஒழுங்கா இருக்கணும், மத்தவங்களை மாத்த முடியாட்டியும்.

Thursday 23 October 2008

Long live இட்லிவடை!!!

நான் follow பண்ற பதிவுகளில் முதலிடத்தில் இருக்கும் இட்லிவடைக்கு வெற்றிகரமான ஐந்தாண்டு நிறைவு...
அதை முன்னிட்டு நான் அவங்களைப் பத்தி என்ன நெனைக்குறேன்னு கேட்டாங்க....நம்மளை மதிச்சு கேக்குறாங்களேன்னு நானும் கடகடன்னு எழுதி குடுத்துட்டேன்...
என்ன எழுதினேன்னு பாக்க இங்க போங்க.

Thursday 9 October 2008

Marriage and XOR


Marriage and XOR.
What is that I am trying to relate?
Please comment with your views.

Monday 29 September 2008

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி...

"come came come"

"eat ate eaten"

"is was been"

இந்த present, past, past-perfect tense நான் படிச்சப்போ எனக்கு 6 வயசு.

இந்த காலத்து புள்ளங்க பிறக்கும் போதே, tense voice லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் பொறக்குதுங்க. ஆனால் நான் சொல்லுறது 23 வருஷத்துக்கு முன்னாடி.

என் அப்பா ஒரு M.A, B.Ed பட்டதாரி. M.A English literature. அவங்களுக்கு ஆங்கிலத்தில் ஆர்வம் என்று சொல்லுறத விட வெறி ன்னு சொல்லுறது ரொம்ப பொருந்தும் .
ஷேக்ஸ்பியர் ஐ எல்லாம் கரைத்து குடித்தவர். English Dictionary யைக் கூட, பசி தூக்கம் மறந்து படிக்க முடியும் எங்க அப்பாவால் .... 'Around the world in 80 days' novel கதையை எங்கப்பா சொல்ல, நான், தம்பி,அம்மா மூணு பேரும் திறந்த வாய் மூடாமல் கேட்டிருக்கோம். வாழ்க்கையில் எதையுமே ரசித்து செய்வாங்க. ஜூனியர் விகடன் ல அப்போல்லாம் ஒரு படம் குடுத்து அதுக்கு பொருத்தமாக ஒரு புதுக் கவிதை எழுத சொல்லி போட்டி வரும். அதற்கு எங்கப்பா கவிதை எழுதி அனுப்புவதை பார்த்து தான் எனக்கே கவிதை எழுதும் ஆசை வந்தது.

"முடிந்து போன விஷயங்கள் பத்தி கவலைப் படுவதில் அர்த்தம் இல்ல...."
"அடுத்தவர்கள் நம்மை பார்த்து பரிதாபப் படுற மாதிரி நம்ம வாழக்கூடாது, பொறாமைப் படுற மாதிரி தான் வாழணும்" இதெல்லாம் எங்கப்பா அடிக்கடி சொல்லக் கேட்ருக்கேன்.

சைக்கிள்கள் மட்டுமே இருந்த எங்க ஊருல முதல் முதலாய் TVS-50 வாங்கியது எங்கப்பா தான்.சினிமா பார்ப்பதில் ரொம்ப ஆர்வம்....அதே சினிமா ஆர்வம் தான் எனக்கும் வந்துருக்கு போல...


எங்க ஊரு ல இருக்குற எல்லா பத்தாம் கிளாஸ் பசங்களுக்கும் English டீச்சர் னா அது எங்கப்பா தான்.எங்க ஊருல English மீடியம் ஸ்கூல் கெடயாது. அதுனால தமிழ் மீடியம் ல படிச்சுட்டு இருந்த என்னை, English ல நல்ல proficiency கெடைக்கணும் ன்னு plan பண்ணி எங்கப்பா பண்ண பல விஷயங்கள்ல ஒண்ணு தான் இந்த பதிவின் முதல் சில வரிகள்.

அப்போ உள்ள தமிழ்நாடு state board syllabus ல , 10th English second paper ல தான், tense voice லாம் வரும். எங்க அப்பா தொண்டை தண்ணி வத்த வத்த , கத்தி கத்தி அந்த பசங்களுக்கு tense voice பாடம் நடத்துவாங்க. அந்த 10th work book ல இருக்க tense full ஆ என்னை 6 வயசுலேயே படிக்க வெச்சாங்க.

"This is All India Radio. News Read by...."

தினமும் காலை 8.10 க்கு எங்கள் வீட்டு Radio வில் English News கண்டிப்பா கேக்கணும் என்பது என் அப்பாவின் order. கேட்டால் மட்டும் போதாது. ஒரு paper பேனா வெச்சுக்கிட்டு அந்த News ல எனக்கு புரிந்த எல்லா வார்த்தைகளையும் எழுதணும். News முடிஞ்சோன எங்கப்பா கிட்ட காட்டணும். காலைல 8.10 க்கு எங்க வீட்டுல டிபன் ரெடி ஆகி இருக்காது....பசியில் நான் செரியா கவனிக்காம விட்டுட போறேன்னு, daily 8 மணிக்கு, ரெண்டு spencers bread க்கு நடுவே kissan jam வெச்சு தர ஆரம்பிச்சாங்க எங்கப்பா...நாளுக்கு நாள் நான் எழுதும் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது...:-)


தமிழ் மீடியம் ல படித்ததுனாலயோ என்னவோ, நான் English Vocabulary கொஞ்சம் weak தான். ஆனா அப்பா குடுத்த grammar பயிற்சி, தைர்யம் எல்லாம் english படிப்பதிலும்,பேசுவதிலும் எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொண்டது.

9th ல இருந்து ஹாஸ்டல் ல தங்கி படிச்ச நான் SSLC Public exam ல English மீடியம் புள்ளைங்களை எல்லாம் விட English ல ஜாஸ்தி மார்க் வாங்கினேன். 96/100.+2 விலும் 176/200.

என்னுடைய college friends and colleagues யாருமே நான் 12th வரைக்கும் தமிழ் மீடியம் ல படித்தேன் ன்னு சொன்னா நம்பினது இல்ல...'you dont speak like one" ன்னு தான் சொல்லி இருக்காங்க,

நான் டென்மார்க் ல interview attend பண்ணப்போவும் சரி, ஸ்வீடன் ல interview attend பண்ணப்போவும் சரி, interviewers எனக்கு குடுத்த முதல் கமெண்ட் "Your spoken language is very clear and communicative"

அந்த குட்டி ஊருல ஒரே ஒருத்தருக்கு தான் ஹிந்தி தெரியும், அவர பிடிச்சு எனக்கு ஹிந்தி சொல்லி தர வெச்சாங்க.... அவரும் என்னை Prachaara Sabha exams லாம் எழுத வெச்சாரு.

டெல்லி ல ஒரு வருஷம் வேலை பாத்தப்போ தான் ஹிந்தி படிச்சதோட பலனை முழுசா அனுபவிச்சேன். வீட்டு வேலை செய்யும் வட நாட்டு வேலைக்காரம்மா, கூர்க்கா, ஆட்டோ டிரைவர், பஸ் டிரைவர், கடைக்காரர்கள் இவர்களோடு எல்லாம் பேசி சமாளிக்க என் வீட்டுக்காரர் என்னை கூப்பிடும் அளவுக்கு என்னால் ஹிந்தி பேச முடியும்.

Bangalore ல, north-indians கூட்டம் அதிகமா இருக்குற projects ல எல்லாம் official language itself ஹிந்தி மாதிரி இருக்கும். Project meetings ல கூட நடு நடுவுல ஹிந்தி புகுந்து வெளாடும்.North Indians க்கு பொதுவாகவே ஒரு கருத்து என்னன்னா.....'தமிழ் நாட்டு காரங்களுக்கு ஹிந்தி தெரியாது" அது ஏதோ ஒரு down-syndrome மாதிரி கருதப்படும் ஒரு விஷயம். அவர்களோடு சரளமாக ஹிந்தி பேச முடியாட்டியும் கூட அவர்கள் பேசுவதை வெகு இயல்பாக, சுலபமாக புரிந்து கொண்டு ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து ஒரு பதில் சொல்ல சமாளிக்க முடிவதெல்லாம் என் அப்பா என்னை ஹிந்தி படிக்க வெச்சதுனால தான்.வீட்டிலும் ஹிந்தி படங்கள் பார்க்கும் நேரங்கள் எனக்கு ரொம்ப பிடித்தவை. அதுவும் subtitles இல்லாத படங்கள். "ஏய், அவன் என்ன சொல்லுறான்னு சொல்லிட்டு சிரி" என்று என்னை superior ஆக feel பண்ண வைத்த தருணங்கள்.

இப்படி தந்தை மகற்கு ஆற்றும் நன்றி யை மிக சரியாகவே செய்த என் அப்பா.

அப்பாக்கு Travelling ல மிக மிக ஆர்வம்.எந்த ஊருக்கு போனாலும் திரும்பி வீட்டுக்கு வரப்போ , snacks வாங்கிட்டு வராங்களோ இல்லையோ, English சம்பந்தமான books எனக்கு வாங்கிட்டு வருவாங்க....
ஒரு முறை என் அப்பாவுடன் வேலை பாத்த ஒரு colleague கிட்ட சொல்லி எனக்கு
lifco dictionary வாங்கிட்டு வர சொன்னாங்க, அத என்கிட்டே குடுக்க எங்க வீட்டுக்கு வந்த அவரு சொன்னாரு , " உங்கப்பாவே ஒரு பெரிய dictionary, ஸ்கூல் ல எல்லாரும் English ல என்ன doubt னாலும் அவர தான் கேப்போம், அப்டி இருக்கப்போ, உனக்கு ஏம்மா தனியா ஒரு dictionary?" ன்னு கேட்டாரு....அந்த sir க்கு தெரிந்து இருக்க நியாயம் இல்ல....'வெறும் ஆறாவதும், நான்காவதும் படித்து கொண்டு இருக்கும் என்னிடம் இருந்தும் தம்பியிடம் இருந்தும் அந்த live - dictionary யை கடவுள் பறித்து கொள்ள போகிறார், அதை உணர்ந்து தானோ என்னமோ எனக்கு backup-dictionary வாங்கி தர என் அப்பா யோசித்து இருக்கிறார்கள்' என்று.


"10th ல state ரேங்க் வாங்கி உன் போட்டோ paper ல வரணும்"
"ஹிந்தி விடாம படிக்கணும்"
"IAS ஆகணும்"

இதெல்லாம் தான் என்னை பொறுத்த வரை என் அப்பாவின் எதிர்பார்ப்புகள்.

மகள் தந்தைக்கு ஆற்றும் உதவியையும் ஓரளவிற்கு நான் சரியாகவே செய்து வருகிறேன்.
10th ல state third rank. 483/500.
Paper ல என் போட்டோ வந்தது.
எங்கள் குடும்பத்தில் எல்லாருக்குமே சிரிப்புக்கு பதில் அழுகை தான் வந்தது...
இதை பார்க்க ஆசை பட்ட அப்பா போட்டோ வில் இருக்கும் போது யாரால் சிரிக்க முடியும்?

Dakshin Bharath Hindi Prachara Sabha exams ல Visharad வரைக்கும் முடித்து சபாவின் சால்வை.

IAS exams க்கு படிக்குற அளவுக்கு பொறுமையும் வெறியும் இல்லை.ஒரு வேளை அப்பா இருந்து இருந்தால் ஆகி இருப்பேனோ என்னவோ....

"உங்கப்பா கிளாஸ் எடுத்தா, சிரிப்பலையில் classroom அதிரும்மா, அவ்வளவு humorous ஆ , involve ஆகி பாடம் நடத்துவாரு. அவருக்கு நாங்கல்லாம் 'சிரிப்பூட்டும் வாயு' (laughing gas-நைட்ரஸ் ஆக்சைடு) ன்னு பேரு வெச்சுருந்தோம்" - சில வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை பஸ் ல நான் சந்தித்த அப்பாவின் மாணவர்.

"டீச்சர், உங்க சார் கிட்ட தான் என் தம்பி படிச்சான். அவர் குடுத்த அறிவுரைகளும், வழிகாட்டுதலும் தான் இன்னைக்கு அவனை மாதம் ஐந்திலக்க சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறது" அம்மா ஸ்கூலுக்கு சில மாதங்களுக்கு முன்னால் transfer ஆகி வந்த attender.

"தம்பி, நீங்க KS சார் பையன் தான? நான் உங்கப்பா கிட்ட தான் படிச்சேன்..."
இது தம்பி ஓசூர் ல சந்தித்த ஹோட்டல் முதலாளி.

பத்தே வருடங்கள் மட்டுமே என்னுடன் வாழ்ந்த, பத்தொன்பது வருடங்களுக்கு முன்னால் இழந்த அப்பாவை அடிக்கடி இப்படி பலரிடம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

அர்ஜுன் பொறந்தப்போ, எல்லாரும் அர்ஜுனை பாக்க அப்பாவுக்கு கொடுத்து வைக்கலைன்னு சொன்னாங்க....எனக்கு என்னமோ அப்பாவிடம் ஆங்கிலம் படிக்க அர்ஜுன் க்கு கொடுத்து வைக்கலைன்னு தான் தோணுச்சு.

மறுபிறவி என்பதெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் அப்பா தான் அர்ஜுனாக என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்!!!

Friday 19 September 2008

சரோஜா, தாம் தூம், மொட்டை, டெல்லி,Roger, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்

ஒரு வழியா சொந்த நாட்டுக்கு வந்தாச்சு.
வந்ததோட முதல் மற்றும் இரண்டாவது பலன். தாம் தூம் , சரோஜா ரெண்டும் சத்யம் சினிமா ல .....அதுவும் சரோஜா ரிலீஸ் அன்னைக்கே....அர்ஜுனை தூங்க வெச்சு அவங்க ஆச்சி கிட்ட தள்ளிட்டு....

சரோஜா ரொம்ப பிடிச்சுது. நெறைய timing ஜோக்ஸ், ரொம்ப casual actors.... Venkatprabhu has lived upto the expectation. எனக்கு எப்போவுமே இந்த மாறி ஒரு 'off the trend' and 'highly expected' kind of படத்தை தியேட்டர் ல அதும் ரிலீஸ் அன்னைக்கு பாக்கணும் ன்னு ஆசை. infact, நான் இது வரைக்கும் ரிலீஸ் அன்னைக்கு எந்த படமும் பாத்து இல்ல....so எல்லாரும் பயங்கரமா கத்துவாங்க, whistle லாம் அடிப்பாங்க ன்னு நெனச்சு போனேன். ஆனா எல்லாரும் ரொம்ப quiet ஆ பாக்குறாங்க...
எங்க ஆளு, 'balcony fully blocked, may be, படத்தோட மொத்த team மும் balcony ல உக்காந்து, opening எப்டி இருக்குன்னு பாக்குறாங்க போலிருக்கு' ன்னு சொன்னாரு. அதுனால எனக்கு 'ஐயோ வெங்கட்பிரபு balcony ல இருந்தார்னா அவருக்கு " என்னடா யாருமே whistle அடிக்கலை, கை தட்டலைன்னு" கவலையா இருக்குமே' ன்னு கவலையா இருந்துச்சு. ஆனா இந்த quiet crowd கூட, சில பல காமெடி க்கு விழுந்து விழுந்து சிரிச்சுது. 'ஜெய்' வர்ற சீன் ல நான் பயங்கரமா சிரிச்சு, அவரோட popcorn ஐ தட்டி விட்டு, காமெடி - tragedy ஆனது குறிப்பிட தக்கது.

படம் முடிஞ்சப்போ பின்னாடி ஒருத்தர் "இதுக்கு தான் 'உதயம்' போலாம் ன்னு சொன்னேன், நீ கேக்கலை....இங்க பாரு எல்லாம் அமைதியா பாக்குறாங்க....சென்னை-28 உதயம் ல எவ்ளோ ஜாலி யா பாத்தோம் ன்னு' அவரோட friend கிட்ட சொன்னாரு....'அட, ஆமாங்க' ன்னு சொல்லணும் ன்னு தோணுச்சு....ஆனா சொல்லலை...படம் நல்லா ஓடுதுன்னு நேத்து எங்க ஆளு sify ல படிச்சாராம். சந்தோசம், actually இந்த மாறி படம் லாம் நல்லா ஓடணும்.

உள்ளம் கேட்குமே, 12B, உன்னாலே உன்னாலே எல்லாம் பாத்து, அதே எதிர்பார்ப்புல தாம் தூம் போனோம், ஆனா பாதி படம் மட்டுமே ஜீவா சார் கைவண்ணம் என்பதாலயோ என்னமோ, படம் எனக்கு அவ்ளோ ருசிக்கலை. படத்தோட heroine ஐ விட , லக்ஷ்மி ராய் smart ஆ இருக்க மாறி இருந்துச்சு. அவங்க டோனி கூடல்லாம் bike ல போயி இருக்காங்களாமே.....?

ரெண்டு படத்துக்கும் ஒரு ஒற்றுமை என்னன்னா கடைசி கடைசில ஜெயராம் 'டேய் நான் தாண்டா வில்லன்' ன்னு வர்றது.

அப்றோம் இத்தனை நாளா நீளமா முடி வளர்ந்து 'பாடி ஸ்டுடா' hairstyle ல்ல இருந்த நம்ம அர்ஜுன் க்கு வடபழனி முருகன் கோவில் ல போயி, அவன் கதற கதற, மொட்டை போட்டாச்சு. வீட்டுக்கு வந்து கண்ணாடில அவனையே அவனுக்கு காமிச்சேன்....மொழு மொழு ன்னு இருந்த தலைய பாத்தான், அப்றோம் அத தடவி பாத்தான்....அவ்ளோ தான்...'அம்மாஆஆஆஆஆஆஆ' ன்னு ஒரே கத்து...:-)

பயந்த மாறியே டெல்லி ல குண்டு வெச்சுட்டாங்க...
ஏதோ ஒரு blog ல படிச்சேன்....'இப்டில்லாம் பண்ணுறதுக்கு ஒட்டு மொத்தமா எங்க நாட்டை அழிச்சுடுங்க.....எங்க சொந்தங்களை இழந்து வாழ்வதை விட, மொத்தமாக சாவதற்கு நாங்கள் தயார்' என்று எழுதி இருக்காங்க.
என்னோட stand point கூட இதான்.
"தீவிரவாதத்தால் பலி கொள்ளப் படுவது மொத்த குடும்பமாக இருந்து விடுவது எவ்வளவோ மேலானது....
ஓரிருவரை இழப்பதை விட....
ஓரிருவர் மட்டும் மிஞ்சுவதை விட..."


அப்றோம் சமீபத்திய ஆறுதல், Roger American open டைட்டில் வாங்கினது. இதுக்கு அப்றோம், Roger ஐ கொஞ்சம் ஜாஸ்தி watch பண்ணிட்டு இருக்கேன், ஒலிம்பிக் லையும் ஊத்திக்கிட்டோன, சின்ன கறுப்பர் கிட்ட செம சண்டை...நல்ல வேளை, இதுல win பண்ணிட்டாரு.

'காடி நம்பர் எரடு, ஒம்பத்து மூறு, நால்கு.... '

'டாக்ஸி பேக்கா மேடம்?'

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பிடிச்சு நம்ம பெங்களூரு க்கு வந்து சேந்தாச்சு. 3 வருஷத்துல ஒண்ணும் பெரிசா மாறலை. ஆட்டோ drivers, house brokers, house owners, இப்டி பெங்களூரு வின் அதி முக்கியமான பிரமுகர்களை எல்லாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். Hope God Bless us with a healthy and peaceful living in Bangalore. I need a lot of It now.

Thursday 28 August 2008

முக்கையா... முங்கி...டோபியோ

இது சத்தியமா தமிழ் வார்த்தைகள் தான்.
என் பையன் முருங்கைக்காய், முள்ளங்கி, Tomato க்கு தான் இப்படி பேரு வெச்சுருக்கான்.

முருங்கைக்காய் - முக்கையா
முள்ளங்கி - முங்கி
Tomato - டோபியோ

இன்னும் சில...
Biga - Brinjal
பாப்பையா (salamon பாப்பையா மாதிரி உச்சரிப்பு) - Papaya
Babo - Mango
குச்சாச்சு - குளிச்சாச்சு
சாப்பியா - சாப்பிட்டியா
தபர் - டம்ளர்
அம்மியாம் - அம்மாச்சி
போப்பு - சோப்பு
தய்யம் - தண்ணி
பீபூ - பீட்ரூட்
அப்பியா - அப்படியா (if anyone says அப்படியா he repeats அப்பியா)
கிக்கன் - சிக்கன்,

ச்சாமீ - God, விபூதி, விளக்கு, குங்குமம் எதை பார்த்தாலும் ச்சாமீ தான்....!!!
காப்பாக்கு - காப்பாத்து
சாவம் - சாதம்
அசி - அரிசி


இது மாறி நெறைய இருக்கு....இதெல்லாம் சும்மா samples....:-)

Wednesday 27 August 2008

சொர்க்கமே என்றாலும்...

'உங்க சொந்த ஊரு எது?'

'திருச்சி பக்கம்'( வழக்கமா சொல்லுறது தான்...)

'திருச்சி பக்கத்துல எங்க?'

'புதுக்கோட்டை....'(ஆஹா ஆரம்பிச்சுடுச்சு...இது எங்க போயி நிக்கும் னு எனக்கு நல்லா தெரியும்)'...

'proper புதுக்கோட்டை யா?'

'இல்ல...அங்கே இருந்து கொஞ்சம்(???) தூரத்தில அறந்தாங்கி.....'

'ஓ! அறந்தாங்கி யா?'

'அட இருங்க, நான் இன்னும் முடிக்கலை, அறந்தாங்கி பக்கத்துல கீரமங்கலம் பேரூராட்சி (பக்கத்துல வேம்பன்குடி கிராமம்)'

'அட மக்கா! இதான் திருச்சி பக்கமா??முழுசா 100km ஐ ஒரு 'பக்கம்' ல மறச்சுட்டியே....பேரூராட்சியாம்ல....நான் மட்டும் கேள்வி கேக்கலைன்னா நீ ஏதோ மாநகராட்சி லேர்ந்து வந்துருக்கே ன்னுல்ல நெனச்சுருப்பேன்.....ம்ம்ம் போ போ....'

My face hanging.

காலேஜ் சேந்த புதுசுல ஒவ்வொரு புது அறிமுகமும் இப்படி தான் தொடங்கும்.

ஒரு செமஸ்டர் லீவ் ல என் classmates ரெண்டு பேரு எனக்கு DTDC ல courier அனுப்ப try பண்ண போக, (எங்க ஊருக்கு அப்போல்லாம் professional மட்டும் தான் சர்வீஸ்)courier காரன் இந்த ஊருக்கு எல்லாம் டெலிவரி இல்ல ன்னு சொல்ல போக...அவங்க ரெண்டு பேறும் எக்கச்சக்கமா கடி ஆயிட்டாங்க...அதுல ஒருத்தனுக்கு, நான் ஆட்டோகிராப் ல வேம்பன்குடி(west) னு அட்ரஸ் எழுத போயி, அவன் கொலை வெறி ஆகி, 'உங்க ஊருல இருக்குறதே நாலு வீடு தான், அதுல east,west, north, south லாம் தேவையா?? னு பின்னிட்டான்.

காலேஜ் ல லீவ் விட்டா போதும்.....கிளாஸ் ல எல்லாரும், "என்ன ப்ரியா....மாட்டு வண்டி, ஆரத்தி, குலவை விடுறதுக்கு, கொட்டு க்கு எல்லாம் சொல்லியாச்சா??" ன்னு கலாசிடுவாங்க.....'என் இனிய கிராமத்து மக்களே" பாரதிராஜா படத்துல வர கிராமம் மாறி எங்க ஊரு இருக்கும் னு அவங்களே முடிவு பண்ணிட்டாங்க.

இதே மாறி, "I am from Nagercoil(பக்கத்துல நல்லூர்) " னு பீலா விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டி நமக்கு pick up ஆனது தனி track.

அடிக்கடி நானும் என் தம்பியும் 'ச்ச,நம்ம வேற ஊருல பொறந்து இருக்கலாம்' னு feel பண்ணுவோம். ஏன்னா ஒவ்வொரு முறை ஊருக்கு போறதும், ஒரு பெரிய travel experience ஆ இருக்கும்.
டெல்லி ல வேலை பாக்குறப்போ, காலைல சென்னை வந்து இறங்கினதும் , அடிச்சு பிடிச்சு Paris corner போயி, ஊருக்கு பஸ் பிடிக்குறப்போ, ரொம்ப கடுப்பா இருக்கும், என்னடா வந்து இறங்கினோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம இன்னும் பத்து மணி நேரத்துக்கு மேல travel பண்ணனுமேன்னு.....அதும் அறந்தாங்கி வரைக்கும் கூட போய்டலாம். அங்க இருந்து எங்க ஊருக்கு ஒரு பஸ் விட்டா அப்றோம் அடுத்த பஸ் வர்ற வரைக்கும் பேய் முழி முழிச்சுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் ல நிக்க வேண்டியது தான். என் தம்பி நெறைய வாட்டி, அறந்தாங்கி ல வெயிட் பண்ணி பண்ணி, பொங்கி எழுந்து வீட்டுக்கு போன் பண்ணி, பக்கத்துல தான் சென்னை பஸ் நிக்குது, அதுல ஏறி சென்னை க்கே திரும்பி போறேன்னு சொல்லுவான்....

ஸ்வீடன், டென்மார்க் ல இருந்து வரப்போ, அங்க இருந்து சென்னை வர ஆகுற டைம் விட, சென்னை ல இருந்து எங்க ஊருக்கு போறதுக்கு ஜாஸ்தி டைம் ஆகும்.

ஆனா எங்க ஊரு compare பண்றப்போ நல்லூர் ரொம்ப சின்ன ஊரு.
எங்க ஊருல ரெண்டு higher secondary school, மூணு elementary school, நாலு கல்யாண மண்டபம், ரெண்டு தியேட்டர் எல்லாம் இருக்கு....நல்லூர் என்பது நாலே நாலு தெரு மட்டும் இருக்குற ஒரு சிற்றூர். ஆனா எப்போ இந்த argument வந்தாலும் இந்த travel மேட்டர் ல அவர் என்னை overtake பண்ணிடுவார். "நாகர்கோயில் வரைக்கும் direct train, அப்றோம் அங்கேருந்து 20 mins travel" னு, இந்த ஒரு பாயிண்ட் வெச்சே என்னை பேச்சிழக்க பண்ணிடுவாரு....:-(

But whatever it is, எங்க ஊரு எனக்கு special, like anyone else...

இப்போ தான் ஒரு 10 நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தேன்.
படிக்குறப்போ லீவ் க்கு வந்துட்டு, hostel கெளம்பும் போது எப்புடி அழுகை வருமோ அதே மாறி தான் இப்போவும் வருது...

நம்மூரு போல வருமா???

Friday 15 August 2008

"தாயின் மணிக்கொடி பாரீர்" நல்லா பாடணும்..."கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர், எங்கும் காணரு வீரர் பெருந்திரள் கூட்டம்" கூட்டம் ல சுதி சரி இல்லன்னு, பாவம் பாட்டு டீச்சர் எத்தனை வாட்டி சொல்லி குடுத்தாங்க....
கட்டி வெச்ச கொடி மேல போனதும் ஒழுங்கா அவிழ்ந்துக்குமா... பட்டொளி வீசி பறக்குமா....கொடிக்குள்ள வெச்ச பூ எல்லாம் அழகா கீழ உதிருமா ...
ஸ்கூல் Salute ல, order சொல்றப்போ கை வந்து டிரஸ்/கால் ல அடிக்குற மாறி சத்தம் வர கூடாது, gentle ஆ பண்ணனும் னு PT மிஸ் சொன்னது மறந்துட கூடாது.கம்பத்துக்கு கீழ போட்ட கோலம் அழியாம இருக்கணும்... marching பண்றப்போ நான் left-right கரெக்ட் ஆ வெப்பேனா... என் கிளாஸ் புள்ளைங்க எல்லாம் கரெக்ட் ஆ march பண்ணுமா... அம்மா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... அப்பா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... function முடிஞ்சு பெஞ்ச் லாம் arrange பண்ணிட்டு நான் வீட்டுக்கு போயி சேருரதுக்குள்ள அந்த dog (என் தம்பி) எல்லா ஸ்வீட்டையும் முடிச்சுடுவானா..... இப்படி பலவிதமான டென்ஷன் இருக்கும்.இது அஞ்சாவது படிச்சு முடிக்குற வரைக்கும்!

கொஞ்சம் வளர்ந்து, ஒரு ஆறாவது முதல் பன்னிரெண்டாவது படிக்குற வரைக்கும் ஸ்கூல் ல நடக்குற பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில், 'என்னை கவர்ந்த தலைவர்' , 'எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்' , 'எதிர் கால இந்தியாவில் நான்' ... இன்ன பிற தலைப்புகளில் நம்ம தெறமை காட்டி இருக்குறதுக்கு பரிசு கெடைக்குமா, கண்டிப்பா கெடைக்கும்... ஆனா first price கெடைக்குமா....இன்னைக்கு hostel ல ஏதாச்சும் ஸ்பெஷல் லஞ்ச் இருக்குமா... இல்ல... எப்போதும் போல தானா...
இப்டி கவலைகள்.


"ரோகிணி காம்ப்ளெக்ஸ் ல கிடைக்கலைன்னா ஆட்டோ பிடிச்சு அபிராமி போனா atleast black ல சர்வ நிச்சியமா வாங்கிடலாம், warden அதே படத்துக்கு வந்து தொலச்சுட கூடாது" இது கல்லூரி வாசல்.

Corporate world ல அடி எடுத்து வெச்ச நாளா , "monday இல்லாட்டி friday ல வந்தா நல்லா இருக்கும், ஊருக்கு போலாம் மூணு நாளைக்கு, KPN ல டிக்கெட் வாங்குறதுக்குள்ள உயிரே போய்டும்.....try பண்லாம்...., பாப்பையா ஐயா எந்த தலைப்பு வெச்சுருக்காரோ தெரியலை... ராஜா பேசுறப்போ கரண்ட் போய்ட கூடாது...என்ன படத்தை போடுறானோ என்னவோ..."

ஆனா சமீப காலமா "கடவுளே, எங்க நாட்டுல எங்கயும் குண்டு வெடிச்சுட கூடாது, காப்பாத்துப்பா சாமீ!!!" இந்த பயம் கலந்த சிந்தனை தான் மனசுல ஓடுது......டிவி ல ஏதாவது flash news வந்தா கூட 'பக் பக்' னு மனசு பதறுது.

62 ஆவது சுதந்திர தினம்.
"இந்தியா பொருளாதாரத்துல முன்னேறணும், வல்லரசாகனும், அந்நிய செலாவணி பெருகணும்..."
இப்டின்னு பெரிய கனவு எல்லாம் எனக்கு இல்லவே இல்ல....அந்த கனவு எல்லாம் காணுறதுக்கு நெறைய பெரியவங்க இருக்காங்க....என் கனவு, வேண்டுதல் எல்லாம் இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணு தான். "எங்க நாடு அமைதியான நாடா இருக்கணும்"

தாய் மண்ணே வணக்கம்!!!

Friday 11 July 2008

Roger Vs Nadal

எட்டாவது படிக்குறப்போ, Chris Evert பத்தி ஒரு lesson,

அப்றோம் காலேஜ் first year ல என் room-mate ஆர்த்தி Pete Sampras ஐ தீவிரமா love பண்ணா.

"ஸ்டெபி ொம்ப அழகா இருக்காளே, oh அவளுக்கும் மொட்டை மண்டை அகாசி க்கும் love ஆ?"

அதுக்கு அப்றோம் கம்பெனி ல பக்கத்து cubicle பையன் screen saver ல மரியா ஷரபோவா பாத்து, "அட, நெடு நெடு ன்னு என்னமா இருக்கா??"

அப்புறம் ஒரு வாட்டி கம்பெனி outing போன club ல டென்னிஸ் கோர்ட் இருக்க போயி, அந்த bat...(Grrrrrrrr அது ராக்கெட், அப்டின்னு எங்க ஆளு மொறச்சுகிட்டே சொல்லுற மாறி ஞாபகம் வருது) தூக்கி பாத்து, இத வெச்சு எப்டி தான் வெளாடுறாய்ங்களோ ன்னு பெரு மூச்சு.

எனக்கும் டென்னிஸ்க்கும் இவ்ளோ தான் சம்பந்தம்.

அப்றோம் என்னத்துக்கு இப்புடி ஒரு heading....எல்லாம் ஒரு வெளம்பரத்துக்கு தான்.

இந்த தலைப்பைப் பாத்துட்டு யாராச்சும் நான் மேட்ச் பத்தில்லாம் எழுத போறேன்னு நெனச்சா, "அண்ணா.....அது நான் இல்லீங்கோ....எனக்கு அதெல்லாம் தெரியாது"

ஊருல எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச கிரிக்கெட்டே நமக்கு சரியா தெரியாது.
ஏதோ பந்து உருண்டு உருண்டு கோட்டுக்கு வெளிய போனா நாலு ரன், அதுவே பறந்து போச்சுன்னா ஆறு ரன், batsman பின்னாடி நட்டு வெச்சுருக்குற மூணு குச்சிய தட்டி விட்டுடுச்சுன்னா அந்த ஆளு out. இப்டி உல்லுல்லாயி மேட்டர் வெச்சே மேட்ச் பாக்குற ஆளு நான். என் வீட்டுகாரரும் நெறைய வாட்டி, long on, long off, mid on, mid off, googly, dhoosra, இப்டின்னால்லாம் என்னன்னு சொல்லி குடுத்துருக்காரு.நானும் ஏதோ 2 marks answers மாதிரி மனப்பாடம் பண்ணி வெச்சுருக்கேன். ஆனா ஒருத்தன் googly போட்டா, அது googly தான்னு கண்டு பிடிக்கல்லாம் தெரியாது.Googly,dhoosra லாம் அப்புறம்....மொதல்ல அவன் leg spin போடறானா, off spin ஆ ன்னு கண்டு பிடிக்கவே CPU utilization 90% ஆயிடும், அப்றோம் அவன் மாத்தி போட்டுருக்கான்னு என் சிற்றறிவுக்கு எட்டுறதுக்குள்ள ஓவர் முடிஞ்சுடும்...:-(

என்னைக்காச்சும் அவரோட friends லாம் கிரிக்கெட் பாக்க வந்து, எல்லாரும் எதாச்சும் technical matters பேசிக்கிட்டே பாக்கும் போது, நான் தோனிக்கு இந்த hair style நல்லா இருக்கா.... இல்லாட்டி முன்னாடி நெறைய தலை முடி இருந்ததே better ஆ ன்னு யோசிச்சுக்கிட்டு இருப்பேன்.... மனசுக்குள்ள மொத தடவையா customer meeting attend பண்ண போற மாறி ஒரே திகிலா இருக்கும்....யாராச்சும் என்கிட்டே எதாச்சும் கிரிக்கெட் technique பத்தில்லாம் பேசிடுவாங்களோன்னு....

கிரிக்கெட்டே இப்டின்னா டென்னிஸ் பத்தி நான் சொல்லவே வேணாம்.

இப்டி பட்ட என்னைய நெறைய பேரு ஏகத்துக்கு உசுப்பி விட்டுடாங்க.

"இவிங்க ரெண்டு பேரும் செம rivals, இவன் அவனை clay court ல ஜெயிக்க முடியாது, அவன் இவனை grass court ல அடிச்சுக்க முடியாது....இவன் வேற 5 வாட்டி wimbledon titles வாங்கிட்டான், இந்த முறையும் வாங்கனும்னு செம வெறியோட வெளாடுவான், அவன் french open ல clay court ல தான் வாங்கிருக்கான், first wimbledon டைட்டில், அதுவும், இவனை grass court ல ஜெயிச்சு வாங்கணும்னு முடிவோட வெளாடுவான், செம மேட்சா இருக்க போகுது....cant wait. " - அவர்.

"Can Roger do it again?" - UK ல இருக்க friends லாம் வெச்ச orkut status.

இதெல்லாம் பாத்து நான் ரொம்பவே உசுப்பேரிட்டேன்.

இந்த மாட்சை பார்த்தே தீரனும் டா ன்னு ஒரு கொலை வெறி வந்துடுச்சு!

Sunday. 6th July.

எங்க ஆளுக்கு அவர் கிளப் ல கிரிக்கெட் மேட்ச். மொதல்ல போக வேணாம் னு இருந்தவரு, திடீர்னு மெம்பெர்ஸ் கொறையுது ன்னு சொல்லி கெளம்பிட்டாரு.
. "கண்டிப்பா பாரு, செம மேட்ச், தூங்கிட்டு கோட்டை விட்டுடாதே" ன்னு அன்பா(?) சொல்லிட்டு போனாரு.
நானும் எங்க டைம் ல ஒரு மூணு மணிக்கு டிவி ய on பண்ணி பாத்தேன். ஒரே புள்ளி.....எந்த சேனல் லையும் ஒண்ணுமே தெரியலை.
எங்க ஊருல எல்லாம் கேபிள் டிவி ஆபீஸ் ல பவர் கட் ணா தான் இப்டி ஆகும்.
என்ன கொடுமை இது ன்னு சரவணனை கேட்டுட்டு, சோகமா இருந்தேன்,

அவர் கிரிக்கெட் மேட்ச் முடிஞ்சு அரக்க பறக்க ஓடி வந்தாரு....

"என்ன டீ மேட்ச் பாக்கலையா?"
"டிவி ல ஒண்ணுமே தெரியலை"

அவரு டிவி ய on பண்ணி பாத்துட்டு (அப்போவும் ஒண்ணும் தெரியலை), ஒரு circastic body language ல....எதையோ குனிஞ்சு குனிஞ்சு கட்டில்க்கு கீழ தேடினாரு......

'என்னடா...டிவி தெரியலைன்னா கீழ தேடுறாரு..ரொம்ப வெய்யில கிரிக்கெட் ஆடி இப்டி ஆயிடிச்சோ' - என் மனசாட்சி...அவருக்கு கேக்காது

(ரொம்ப மெதுவா) "ஏங்க ரிமோட் தேடுறீங்களா.....?"

....பாத்தா கட்டில்க்கு கீழ இருக்குற socket ல இருக்க வேண்டிய கேபிள் அவிழ்ந்து விழுந்துருக்கு.. அதை எடுத்து அவர் சொருக, டிவி ல Roger Vs Nadal.

"இது கூட தெரியலை....உனக்கெல்லாம் wimbledon பாக்குறது ஒண்ணு தான் கொறைச்சல்" - அவரோட பார்வை.

"எங்க ஊருல எல்லாம் ஜன்னல் வழியா கேபிள் வந்து டிவி க்கு பின்னாடி சொருகுவோம், இங்க என்ன கட்டில் க்கு கீழ இருக்கு, chaos theory மாதிரி கட்டில்க்கு கீழ ஏதோ பிரச்னை ஆகி, டிவி ல புள்ளி ....இதெல்லாம் எனக்கு என்ன தெரியும்?" - நான்.

'மத்தது எல்லாம் தெரியுமாக்கும்' - இது அவரோட மனசாட்சி. ஆனா எனக்கு கேட்டுடுச்சு.

அப்ப நல்ல நேரத்துக்கு மழை வந்து ஆட்டம் தடை பட்டு மீண்டும் நடக்க ஆரம்பிச்சுருந்துச்சு....

What a come back Roger!
From no where, he was having a bash.

ரொம்ப interesting ஆ பாத்துட்டு இருந்தோம்.

"எங்க Ace ன்னா என்னன்ன்னு சொல்லு பாக்கலாம்....ரொம்ப பெருமையா wimbledon finale பாக்குறே" - வேற yaaru....

"Phew , A serve that the receiver is unable to reach" - சொல்லிட்டோம் ல....
எந்த காலத்துலயோ டென்னிஸ் பாத்தது ஞாபகம் வெச்சு சொல்லிட்டோம் ல...

"volley ன்னா???" - அவரே தான்

"அர்ஜுன் முழிச்சுட்டா மாறி இருக்கு, இருங்க வரேன்" - பே பே னு முழிக்குறதோட, இன்னொரு version.

"A tennis return made by hitting the ball before it bounces" - புரிஞ்சுகிட்டு அவரே சொல்லி குடுத்துட்டாரு.infact நான் answer பண்ணி இருந்தா பயங்கர அதிர்ச்சி ஆயிருக்கும் அவர்க்கு.
ACE கே ஒரு light jerk நோட் பண்ணேன்.

இப்படியா பாத்துட்டு இருக்கப்போ,
I have fallen all in love with Federer.

எவ்ளோ composed ஆ இருக்காரு....கொஞ்சம் கூட டென்ஷன், emotion லாம் வெளிய காட்டாம.....சூப்பர்.

போராடி போராடி Nadal ஜெயிச்சு கீழ விழுந்து சந்தோஷ படுறாரு.
மின்னல் மாறி அத்தனை காமிராக்களும் flash பண்ணுது..... சனிக்கிழமை wiliams sisters match க்கு avlova மின்னின மாறி ஞாபகம் இல்ல...
எனக்கு ஒரே feelings. ஆனா quiet ஆ போயி தண்ணி குடிச்சுட்டு presentation க்கு வந்த Roger, நாலரை மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாம "Nadal is a deserving champion" னு சொன்னது...Hats off.
ஆனா Nadal அவரோட spanish உச்சரிப்புல அழகா சொன்ன மாறி "Roger is THE champion".

ஏற்கனவே நான் டோனி டோனி னு பண்ணுற அளப்பரைல எங்க ஆளு காதுல ஒரு chimney மாட்டலாம் போல பொகையா வரும், நான் இப்டி அடுத்தது ஒண்ணு ஆரம்பிக்க போறேன்னு தெரிஞ்சு இருந்தா அவரு இந்த மேட்ச் பத்தி என்கிட்டே சொல்லியே இருக்க மாட்டாரு.....:-)

நான் எங்க குல தெய்வம் அய்யனார் கிட்டயும், சின்ன கருப்பர் கிட்டயும் ஒரு application போட்டுட்டேன், "Next wimbledon ல Roger தான் ஜெயிக்கணும்"

Thursday 12 June 2008

நெனச்ச மாதிரியே "நான் கடவுள்" பத்தி ஒரு scoop ...sify ல....
கிளைமாக்ஸ் ல ஆர்யா வந்து பூஜாவோட dead body ய சாப்டுறாராம்.
ஏன் இப்டி...
நம்ம சூர்யா அதுக்கு அப்றோம் நெறைய படத்துல அழகா வந்தாலும், பிதா மகன் ல கடைசில சாக்கு உள்ள இருந்து, விகாரமா வருவாரே பிணமா, அந்த மூஞ்சி மறக்க மாட்டேன்குது....இதுல அடுத்தது இப்டி ஒண்ணு ...
ரெண்டு வருட உழைப்பு, பணம், மூளை, இதெல்லாம் வீணா ஆயிட கூடாதுன்னு உங்க படம் நல்ல ஓடனும் னு தோணினாலும், இந்த மாறி கிளைமாக்ஸ் லாம் ரொம்ப ஓவருங்கோ.

அரசாங்கம் ஒரு follow-up

இத படிச்சுட்டு எனக்கும் எங்க வீட்டு அய்யாக்கும் நடந்த ஒரு குட்டி சம்பாஷனை.

அய்யா : You Crazy? (remo மாதிரி படிக்கவும்)but I really enjoyed it.
நான்: என்னை விஜயகாந்த் அளவுக்கு இது வரைக்கும் யாருமே சிரிக்க வெச்சது இல்ல...I owe him something.
அய்யா: அப்போ next election ல அவருக்கு vote போட்டுடு.
நான்: :-))))))))))))

Tuesday 10 June 2008

Arjun's Vocabulary

Arjun is running 16th month and is talking tooooooooooooo muchhhhhhhhhh.
Just thought of compiling his vocabulary.
Cheese, Sease - Cheese.
Bee - Baby
Ka - Car
hevoo - hello, Phone, mobile.
Aajee - Aachi(grandma)
Thatha - thatha (grandpa)
Ammu, Ammi, Amma - Amma (mom)
Appa - Appa(Father, this is so proper from day one)
Akka - Akka (sister)
peppa - periappa
baabaa - mama
baambaa - car horn
iggi -idli, idli plate,idli cooker
kuchi - bread stick
yaaaaaaaannnnnn - meo, cat
puppy -puppy, dog(very proper puppy)
happy - happy, happy birthday doll( a very prper happpppppy)
poo - flower
ha -horse
yiya - nila (moon)
koko -hen, cock
kaka, aa aa - crow
ish - fish
athai - athai (aunty)
kuvi - kuruvi(sparrow)
cc - cd
oogy - oh dear
ooggy ooggy - boogy woogy
papa - papa (baby)
ok - ok
pape -paper
peepaa -tea pot
aashee - aasai (desire)
baa - ball
aafee -coffee
paa -paal (milk)
caanfee -corn flakes
aappuu -apple
pee -pear
opi -open
ko -close
poppi -thoppi(cap)
pappy -chapathi
goo -groot(swedish name for porridge)



and some more,will update as I remember.

Salmon மீன் வறுவல்

"என்ன இன்னைக்கு fish fry எப்டி இருக்குன்னு சொல்லவே இல்ல...?"
"ஒவ்வொரு வாட்டியுமா சொல்ல முடியும்? இப்போல்லாம் தான் நீ standard ஆ ரொம்ப நல்லா வெக்குறியே???"

அட அப்படியா ......கால் தரையில நிக்காம பறக்க ஆரம்பிச்சுடுச்சு....

ஓ! இதான் நிலாவா......பறந்து அவ்ளோ தூரமா வந்துட்டேன்....??

அப்டியே flash back , மூணு வருஷம் முன்னாடி போய்,

"இதான் உங்க ஊருல வெங்காய சட்னி யா?? எனக்கு பொடி வெச்சுடு"
"நான் ஆபீஸ் லேயே லஞ்ச் (மட்டுமாவது ஒழுங்கா) சாப்ட்டுக்றேன்"

இதெல்லாம் நெனச்சு பாத்து கீழ எறங்கிட்டேன்....

கல்யாணம் ஆனா புதுசுல ஒவ்வொரு சாப்பாடு டைம் லயும் பெரிய டென்ஷன் எனக்கு.....ஏன்னா என் சமையல் அவருக்கு அவ்ளோவா, இல்ல இல்ல அவ்ளோவும் புடிக்கலை...

அப்படி இருந்த நான் ....எப்புடி ஆயிட்டேன்...(படிக்க...பதிவின் முதல் மூன்று வரிகள்)

எனக்கு நல்ல பெயர் வாங்கி குடுத்த சில recipes இங்க share பண்ண படும்.

தேவையான பொருள்கள்:



மீன் துண்டுகள்.(படத்தில் இருப்பது salmon fish),
மிளகாய் தூள் 1ஸ்பூன்
மஞ்சள் தூள் ½ஸ்பூன்
மல்லி தூள் 1ஸ்பூன்
சீரக பொடி, மிளகு பொடி, சோம்பு பொடி தலா ½ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
புளி கரைசல் நீர்க்க கரைத்து கொள்ளவும்.

எல்லா பொடி வகைகளையும் கலந்து புளி கரைசல் ஊற்றி பிசைந்து அதை மீன் துண்டுகளில் தடவி முப்பது நிமிடங்கள் ஊற வைக்கவும்.


செய்முறை

செய்முறை பெரிசா இல்ல...கடாய் ல எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் மீன் துண்டுகளை அதில் போட்டு, அடுப்பை sim ல வெச்சு, மீன் துண்டுகளை திருப்பி திருப்பி விட்டு பொரிந்தவுடன் எடுக்கவும்.



குறிப்பு:
salmon இயல்பிலேயே சுவை மிகுந்தது....அதனால இந்த simple மசாலா உபயோகித்து என்னை போன்ற அரை வேக்காடு சமையல் காரர்கள் கூட நல்ல பெயர் வாங்கலாம், நம்ம ஊருல வஞ்சிர மீன் கிட்ட தட்ட இதே போல் சுவையாக இருக்கும்.
salmon மீன் நிறைய கொழுப்பு சத்து மிகுந்தது. அதனால் fry பண்றப்போ அதுவே நிறைய oil release பண்ணும். அதனால நம்ம ரொம்ப குறைவான எண்ணையில் பொரித்தால் போதும். அடி கனமான வாணலியில், குறைந்த தீயில், olive oil இல் பொரித்தால் உடல் நலனையும் கருத்தில் கொண்டதாக அமையும்.
salmon பொரிந்து விட்டதானால் மடல் மடலாக பிரிந்து வரும், அது தான் எடுப்பதற்கு சரியான பக்குவம்.
இந்த recipe, நம்ம ஊரு மீன் வகைகளில் வஞ்சிர மீன் க்கு மட்டுமே பொருந்தும் என்று நினைக்குறேன். மற்ற மீன்களுக்கு மசாலா சற்று அதிகமாக தேங்காய்,வெங்காயம் எல்லாம் அரைத்து செய்ய வேண்டும். அதை பற்றிய குறிப்பு விரைவில்.

Tuesday 3 June 2008

Arasangam - A great stress reliever

I have never seen such a super comedy movie before.
Such a great stress reliever, one would surely get stomach pain because of the overdose of comedy scenes...

In one scene Captain would catch Sriman from villain gang and he would ask him,"nee yaru, un nettuwork enna?"

Then he tells him,"nee sollamaleye unkitta irunthu tekkunology moolama unmaiya varavazhaika mudiyum"

Captain calls his friend manoj throughout the film as 'manoju'.

Captain gives a lecture to his students about seismic effect, receiving antenna, encryption decryption...mudiyalai da samy.

He is a criminologist in the movie...throughout the movie he refers himself as 'kiruminologist'.

Captain says 'anticlare war', he actually meant 'an undeclared war'.

Height is the way villain decides to kill Vijaykanth. Villain ties captain and opens up a vellai panni kootam to attack captain and captain escapes from it and in the next scene villain refers to captain as phoenix bird to have managed to escape.This is inspite of him being an international level terrorist planning bomb blasts etc.

Ultimate climax,Villain sets a bomb in such a way that he has to do a retina authorisation to diffuse the bomb and the bomb is set to blast in a nuclear boiler area which would cause a Hiroshima kinda effect to India(kanna katudhu enaku)...Captain takes the bomb in one hand and holds Villain in the other hand and shows the bomb at villain's face for retina authorisation.Villain closes his eyes to avoid being authorised. wow wow what a thoughtul scene.

Friday 30 May 2008

Vaccinations - A Study

Arjun was born in Denmark and travelled to India and then relocated to Sweden.
I was greatly confused about his vaccination schedules. And I have been receiving questions from my friends, who are new mothers, whose children are born abroad, and travelling/relocating to India or the other way, about the same. I have been questioned by a fellow traveller in the flight also about this. I have discussed quite a lot with doctors in India, Denmark and Sweden and also read about this in the web and I capture my learnings here for the betterment of fellow mothers and also my future reference.

The vaccinations are more or less similar in India, Sweden and Denmark except that there are some extra ones in India. Also the age at which they vaccinate in India is different.

Let me state the abbreviations the doctors use.

D - diphtheria
P - wooping cough
T - Tetanus
OPV/IPV - Oral Polio Vaccine / injectable Polio Vaccine
Hib - Influenza Type B(Known as meningitis in the Europe, which is actually the name of the disease)
MMR - Mums, Measels, Rubella
Hep B - Hepatitis B


A child born in India is given BCG at birth.This is a vaccination against tuberculosis, commonly known T.B and also she is given the first dosage of hep B vaccination at 2 weeks.

In India, there are two types of injections available.
Easy four and Easy five.

Easy four: DPT+Hib
Easy five: DPT+Hib+Hep B

Its so easy that one need not receive too many pricks, but just one prick but all the four/five vaccines. In our childhood, it was known as 'Triple Antigen-Muthaduppu oosi' which was DPT.

Ideally a kid must receive three doses of DPT, Hep B and Hib,by one year.

So a kid that received BCG and Hep B respectively at birth and 2 weeks, will receive one easy five when 45days old, one more easy five at 75 days and one easy four at 105days old, which makes 3 doses of DPT, Hep B and Hib. And each vaccination is also associated with a OPV.Now a days they recommend one dosage of IPV atleast.The doctors make sure each vaccine is given at one month interval at the least.

The same scenario is handled a bit differently in Denmark and Sweden.They dont give the vaccinations at such young age.The first vaccine itself start when the child becomes three months old. In Denmark they claim that there is no Hep B virus and so there is no vaccination for that. But they dont have this easy four, easy five concepts. They prick twice, once for DPT+IPV and once for Hib, I mean meningitis.
And if you want to order Hep B yourself, then one more prick. And there is no BCG vaccine also.You need to order it yourself, if you want. And this DPT+IPV,Hib are repeated at 6 months and 1 year.
In Sweden also the vaccinations are given at 3 months, 6 months and one year but sweet people, just one prick for all the six, DPT+IPV+Hib+Hep B.
In Sweden, they also have BCG vaccine at 6 months old.

Now coming to MMR, in India they recommend a vaccination only for 'measels' at 9 months and a MMR vaccine at 15 months. But in Denmark and Sweden, they give only MMR at 18 months.

Say a child is travelling to India for a vacation before she is given MMR and she is older than 9 months, then its better she gets a measles vaccine as soon as she lands in India.

There are optional vaccinations for chicken pox at one year, typhoid and Hep A at 2 years in India.

So depending on where are you at what age, we must plan the vaccinations for our children.

I would like to add two things.
A reiteration that Hib and meningitis are one and the same. Why I reiterate, is because a friend of mine relocated from India to UK, when her son was one year old, that means he received 3 doses of Hib already, did not know they are the same, ended up giving three more doses of meningitis in UK.Ideally repeating the vaccine must not cause any issue, however it costs our kids one more prick and lots of pain.

And since all the three doses of DPT+OPV are given at so young age for Indian children, its recommended that they receive a DPT booster dose(triple antigen-muthaduppu oosi)+OPV at 18months and another booster of DPT at 5 years. But in Denmark and Sweden they give the DPT booster at 5years, as the children have received the third DPT+IPV dose itself at 1 year. Now, a case, which ideally triggered me to write this post, a friend of mine who is living in Denmark, who may probably relocate to India, who has a one year old son, she asked me about what all vaccinations she would have to give in India.
Since her son has received the third DPT dose itself at one year unlike kids in India who would receive the third dose when 105 days old, she has to discuss about whether to give a booster at 18 months or the booster is enough at 5 years old itself.

Chickenpox

Incidentally or coincidentally, I happened to have few discussions and readings about this of late. Just capturing the learnings here.

Its defined as the following.
'An acute contagious disease caused by herpes varicella zoster virus; causes a rash of vesicles on the face and body'.

I live in Sweden and this HVZ virus seems quite common here. I was alarmed when our colleague Naveen and his 7 months old daughter got infected. Subsequently we travelled to India and I discussed with two paediatricians about giving the vaccination to Arjun. One of them practicing in a town nearer to my native village, 17 years of experience in Paediatrics,did not recommend the vaccine. The reason he stated was, "all my patients are from rural area and very poor, chicken pox vaccine is expensive(1600INR), this disease is not a dangerous one, it may occur just once in a lifetime, so I dont say this is a mandatory one". The other paediatrician is in Chennai and he instantly said, "go for it, as you say this virus is common in Sweden".

My friend Sushila stated, she read in a weekly that cleanliness can prevent this. But I dont agree. As per what I know, this virus can quickly spread via the air. If an infected person sneezes or coughs, and the one who gets exposed to it can get infected.

Ideally the vaccination must prevent this disease. But, my friend Sireesha's 2 years old son has got infected beyond being vaccinated. Her doctor answered her, "one in 100 children may get it, inspite of the vaccination". So, vaccination does not guarentee you 100%. And noramlly once someone gets infected by this virus, their body develops antibodies and hence becomes immune to the virus for lifetime. But I read in the web that some may get it more than once too.

And in India, we associate this with 'Goddes Amman', and all what we do in the name of God, actually prevents the virus to spread out and also decreses the intensity of the disease.
1.We restrict the infected one at home, we dont let visitors.
2.Neem leaves bed
3.Tender coconut drink
4.Once the boils start healing,give bath with turmeric water.

I feel the kids must get the vaccination and also we must practice cleanliness and we may prevent this.

Saturday 24 May 2008

No Name Yet - Part 7

I moved to Denmark with my husband, apparently there were very less Indians at that time. Seema was the first one whom I personally know.
She was my husband's colleague's wife.
I have an admiration for her lovely hair, clean looks and great collection of attires.We started with dining at each other's house and watching each other's wedding DVDs. She was then newly married like me. After watching her DVD, I developed great respect towards her mother. She and her husband joined us for a trip to our dream destination Switzerland.

We all were looking for jobs in Denmark. During one of our tea time chats, she mentioned Freescale has an office in the city where we lived, which I did not know until then. Then I applied with them and infact joined them as I found it to be best among the few offers that I could find there. It was a big break for me and I felt lucky to have known her at that time, though this freescale stuff did not work out that good later!

She was one of the first few visitors at the hospital when I delivered Arjun and it was so thoughtful of her to bring some food for my mom and husband. They relished it after a tiring overnight stay at the hospital.

I am generally very good at making and maintaining friends and so is she, but somehow we both did not become great friends, I actually thought we would, as everything between us started very well. However, wherever we met at get togethers, we have smiled and waved and chit chatted.I was truly happy when she could start her career after a long wait in Denmark, which she has been badly longing for.

I come up with some more interesting ladies whom I met in Denmark. Keep wathcing this space.



(To be continued)

Thursday 22 May 2008

No Name Yet - Part 6

From the time I started to write this series, I have been waiting for this time, to write about the people I feel,
'Blessed with'
.

During my tenure in Sasken, Bangalore, I gained few important people in my life.
This little piece of writing goes as a dedication to them, they deserve much more though.

Pavani
We joined Sasken on the same day. We sat next to each other in the induction, had lunch together, we did not realise we were going to make a beautiful relationship, A relationship that does not expect anything from each other, A relationship which will last lifetime, A relationship which will be filled with hearty laughs, speechless tears...
She is one of the best people I have come across in life. How can one think good for all the people around? She can!
She is the most intelligent I know, too sincere in her work.
She is very irregular in writing mails, replying mails, making phone calls etc. But I for sure know, I hold a very special place in her heart, Afterall, if she has chosen my name to be her password. I left Sasken around 3 years ago and she still remains there. She may have got acquaintances.But I am her only friend and I am very proud about that.She says, 'A friend at work is too important, I miss you Priya'. Its selfish of me, wanting to hear this 'I miss you', especially from her.
I miss you too Pavani, you are a great friend!

Aparna
I met her also on the first day in Sasken, I asked her about the bus route.
We smiled at each other in the subsequent days, went for coffee times...and that is how we became friends. The first thing that attracted me about her was, the way she writes emails. Normally mails from quality team asking for metrics and time sheet filling used to be so boring. But this person knows how to even make those bugging mails interesting. She has amazing quizzing skills, a good singer and her language is awsome. She is very straight forward, even more than the required extent, that she appears rude to many people. Our common colleagues have asked me, "how could you keep close to her?". To me, she is like that and I like her that way!
Whichever company I am in, my coffee time would surely remind me of her and I am sure she will feel the same. We have enjoyable gChat sessions and thats how we are in touch for years now.

Now about some little Angels.
Padma, Anitha, Sonnia, Uma and Raji.
I have many a times felt, God has sent these little Angels to my life. I shared an accomadation with these girls for sometime. They are four years younger to me, but lot matured than me.
I have learnt a lot from them.
Right from silly little things like how to fine chop onions to great lessons in life like, what it means togetherness-one thing that was missing in my earlier stays, what it means not to hurt the people around us, what it means caring for one another...
It does not mean we never had differece of opinions or fights, but we have made up much earlier, quicker, which made our relationship so strong.

Padma
This word means lotus, but to me this word means 'unconditional affection'.
She has quite many times made me guilty, if I am worth all what she has done for me?
She has gone through lots in life, but I used to wonder how could she keep smiling and energetic amidst all these?
She has a passion for craft work and I love the perfection in it.

Anitha
Whenever I knead the dough for chapathi, I think of her with thanks, she has taught me that...She is such a great dancer and a wonderful cook.

Sonnia
She was so dear darling to all of us. Later in life, we happened to sit in two different branches of the same company across continents. I did not have any friends in my office, as I happened to be the only Indian in the whole office, only lady in the technical team. But Sonnia has wiped off my loneliness with her lovely chat session through IM.

Uma
She was a kiddo in our house. A very sensitive but caring person.She has got a perfect nose and lovely hair.She has been so sincere in her love life and she is Blessed with a peaceful wedding with her beloved.

Raji
I have always looked upto Raji for her cool head and wide interest towards movies and sports.

All I said about these five little brats are just too less for what I feel for them. They are very very special to me!And yes, each of them made me felt very special to them at many instances.


(To be continued)

Tuesday 20 May 2008

"என்ன உன் synapse ல update இல்ல??" இப்டி கேட்டு என்னை புளங்காகிதம் அடைய வெச்ச பத்மா, சுபாஷினி, கவிதா இவங்க மூணு பேருக்கும் இந்த பதிவு நன்றியுடன் dedicate செய்ய படுகிறது.
அது என்னன்னா இதுக்கு அப்பாவும் புள்ளை யும் தான் காரணம்.
காலை நேரத்துல நான் கம்ப்யூட்டர் ல உக்காந்தா புள்ளைக்கு புடிக்கலை... இருக்குற பத்து பல்லை வெச்சு நல்லா கடிச்சு விட்டுடுறான். ஆ ஊ னு கத்தி கலாட்டா பண்ணுறான்.....தலைய எதுலயாச்சும் மோதிக்கிட்டு அழுவுறான்....எப்போவும் அவன் கூடவே வெளாடனுமாம். IPL ஆரம்பிச்சதுலேர்ந்து சாயுங்காலம் அப்பா ஆபீஸ் ல இருந்து வந்தோன shoes கூட கழட்டாம மேட்ச் பாக்க உக்காந்துடுராரு. புள்ளை மதியானம் தூங்குறப்போ நான் துணி மடித்தல், கீரை ஆய்தல்,இல்லன்னா தூங்குதல் முதலான வேலைகளில் busyya இருக்குறேன். அதுனால synapse ல நெறையா posts இன்னும் drafts stage ல இருக்கு. ஆனா முக்யமான மூணு பேரு கேட்டதுனால அவசரமாஒரு வெட்டி போஸ்ட்.

IPL ல MI டீம் ல சச்சின் இருக்கதுனால எங்க ஆளு MI டீம் க்கு சப்போர்ட். நான் ஊரு மேல உள்ள பாசத்துல கொஞ்சம், Dhoni இருக்கதுனால நெறைய, CSK க்கு சப்போர்ட். சிந்து பைரவி படத்துல சிவகுமார் சங்கீதம் பத்தி பேசினா, சுலக்ஷ்னா மாடில வடாம் காயுது, கொல்ல பக்கம் துணி காயுது னு யோசிச்சுட்டு இருப்பாங்களே ...அந்த மாதிரி போன சண்டே lund club க்கும், copenhagen club க்கும் நடந்த கிரிக்கெட் மேட்ச் ல எங்க ஆளு நாப்பத்து ஏழு runs, ஒரு விக்கெட் எடுத்து man of the match.....ஆனா எனக்கு கிரிக்கெட் ல இருக்குற நுணுக்கங்கள் அவ்ளோ ஏன் நெறைய players பேரு கூட செரியா தெரியாது...இருந்தாலும் ஏதோ IPL னு ஒன்னு நடக்குது எல்லாரும் பாக்குறாங்க, so நம்மளும் ஒரு டீம் கு சப்போர்ட் பண்ணலாம் னு பண்ணிட்டு இருக்கேன்.

போன wednesday, CSK vs MI match ல Dhoni win பண்ணனும் னு pray பண்ணேன். அது ஊத்திகிச்சு .....அதும் பெரிய அளவுல ஊத்திகுச்சு... எங்க ஆளோட friend ஒருத்தர், அவரும் CSK க்கு சப்போர்ட்....அவர் சொல்லுறாரு...'குருவி படத்த விட பெரிய ஊத்தல்' னு......சுபாஷினி கூட சொன்னா...குருவி சகிக்கலை, காக்கா மாறி இருக்குன்னு.....நான் இன்னும் பாக்கலை... நான் நேபாளி பாத்தேன். recent ஆ பாத்த படங்கள் ல எனக்கு இந்த படம் பிடிச்சுது......ஆனா violence overdose. அப்றோம் 'அறை எண் முன்னூத்தி அஞ்சில் கடவுள்´' பாத்தேன். இந்த டைரக்டர் சிம்பு தேவனோட முதல் படம் 'இம்சை அரசன்' விட எனக்கு இந்த படம் பெட்டேர் னு தோணிச்சு...நெறைய பேருக்கு இம்சை அரசன் ரொம்ப பிடிக்கும், ஆனா எனக்கு என்னமோ அந்த படத்துல வர்ற அக்கா மாலா, கப்சி, இந்த ஜோக் லம் சகிக்கலை......அது செம மொக்கை படம் னு எனக்கு தோணும். அர்ஜுன் அப்பா கிட்ட இம்சை அரசன் விட 'அறை எண்' better னு சொன்னா, படம் ஒண்ணும் பெரிசா ஓடலையே?? னு சொன்னாரு. ஆனா படத்துக்கு ரொம்ப செலவு பண்ண மாறி தெரியலை....போட்ட காசு க்கு மேல கண்டிப்பா தேத்தி இருப்பாங்கன்னு நெனைக்கிறேன். அவர் ஒரு வடிவேலு fan. எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப stressed ஆ தோணுற சமயத்துல nice ஆ 'இம்சை அரசன் போட்டு பாக்கலாமா ?' னு bit ஐ போடுவாரு. 'அய்யா சாமி ஆளை விடுங்க, இந்த மாறி சமயத்துக்குன்னு தான் இருக்கவே இருக்கு...கண்ட நாள் முதல் படம், அது போடுங்க ன்னு ரெண்டு பெரும் உக்காந்துடுவோம். இப்டி அடிக்கடி உக்காந்தே பத்து பதினஞ்சு தடவ அந்த படத்த பாத்துட்டோம். நாங்க ரொம்ப ரொம்ப ரசிச்சு பாத்த 'light romantic comedy' அது.....கண்ட நாள் முதலாய் னு யுவனோட title song ல ஆரம்பிச்சு கிளைமாக்ஸ் வரைக்கும் அலுக்காத ஒரு படம்.
இந்த பட டைரக்டர் ஓட next movie (கண்ணாமூச்சி ஏனடா) க்கும் இதே expectation ல உக்காந்து செம upset.

recent ஆ நான் பாத்து ரொம்ப excite ஆன ஒரு matter kangaroo. இது வரைக்கும் சினிமா ல தான் kangaroo பாத்து இருக்கேன். இப்போ one week ஆ பக்கத்துல உள்ள பார்க் ல summer க்காக ஒரு நாலஞ்சு kangaroo வந்துருக்கு....ரொம்ப soft ஆ இருக்கு....அழகா இருக்கு.....அதோட வயித்துக்குள்ள இருந்து zip தொறந்து வர்ற மாறி அதோட குட்டி எட்டி எட்டி பாக்குறது, அம்மா kangaroo குட்டி க்கு இலகுவா இருக்குறதுக்காக குனிஞ்சு புல்லு மேயுறதும் அப்போ அந்த குட்டி யும் தலைய நீட்டி புல்லு மேயுறதும் சாப்பிட்டு முடிச்சோன அம்மா வயிற்று பைக்குள்ள போயிடுச்சுன்னா அதுக்கு அப்றோம் அங்க ஒரு பை யோ இல்ல அதுக்குள்ள ஒரு குட்டியோ இருக்குறதுக்கான அடையாளமே தெரியாம போயடுறதும், அம்மா kangaroo ரெண்டு காலால தாவி தாவி மனுஷன் நடக்குறது மாறி போறதும் நாள் முழுக்க பாத்துட்டே இருக்கலாம்.....ஆனா ஒண்ணு....நான் அர்ஜுன் ஐ pram ல கூட்டிட்டு போவேன் ல.....'நான் லாம் என் குட்டி ய மடிலையே தூக்கிட்டு அலையுறேன், உனக்கு pram வேண்டி கெடக்கு....?' அப்டின்னு என்னை கேவலமா பாக்கும் அந்த kangaroo....


என் பையன் கத்த ஆரம்புசுட்டான்...இவ்ளோ நேரம் என்னை கம்ப்யூட்டர் ல உக்கார விட்டதுக்கே அவனுக்கு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்....

Friday 18 April 2008

Cricket...

IPL inauguration today!
Whatta grand event it was...hv never seen something like that.
I really wished I was in Bangalore watching it personally than on TV.
I am sure that it would have raised the eye-brows of the cricketers,cricket fans and all the people and media associated with this game across the world...Can India do so much for cricket??? They all would have definitely thought like this. Gosh...it was like (or even more than) a Olympic or some world cup inauguration!!!

I was telling it to Geetha and she got too wild, coz she feels,its all waste of money and instead this money may go to help poor people or some new five year plan may be set up! She was furious to the extent that she said to me,"get lost
dont u ever talk to me abt crkt..plssssssssssssssssssssss".
This is exactly what she said.I copied it from the chat session.

I actually hate cricket more than anyone in the world, but for personal reasons.My husband is too addicted to it. He plays for a club, and spends lotsa time in his practice sessions and matches, and when he is home too, he is glued to some 'xyz' match on the television or playing slogouts, reading something in cricinfo.com, etc.
This game steals his time from me. I even make fun that if ever God Gives him choices between me and Sachin, he would choose Sachin.

But what I personally feel is different from what it actually is. One should see how the crowd relished the function and is relishing the game as such. It is surely a great entertainment to most of us. The whole crowd that was present in the Bangalore stadium today would have just forgotten all their stress and got refreshed. If this is considered waste of money, then I feel all the media that entertains people, be it movies, satellite TVs, theme parks or anything for that matter, must all pack up and spend money with the need and poor. I mean, I agree that poverty must be treated and all those arguments related to it, but I certainly feel an entertainer game like cricket must be welcome.

Tailpiece: Aparna, my friend about whom I will talk in a later episode of no name yet, her husband works for Mukesh Ambani at Reliance Industries.Today she said that his team has designed the suit that Sachin was wearing at the inaugurals. It feels good for me.

Thursday 10 April 2008

No Name Yet - Part 5

From Delhi, I moved to another company in Bangalore, and stayed in BTM layout with few other girls. Subhashini (yes, the same one as in Part 3), Kala, Bhamimi, Ramalakshmi, Sathiya and Prabha. We were more or less of the same age group. All the complications that would arise in such a stay would arise among us also. Like, who would take bath at what time, whose liking the menu would be based on??...May sound silly, but they were serious issues frankly. We all really lacked that feeling of togetherness. One would like green chilly and it would not suit the other. 'For one beetroot would be a favourite veggie and the other hates it like nething'...and 'which channel to watch'...'Who will give up on such issues'...During most arguments, I was the one moderating...and these arguments were not verbal, it was all through group e-mails. Finally they named me Nattamai..:-)...and I used to make that pose like Vijayakumar in the intro scene of Nattamai movie.

But inspite of all these, we had loads of fun. We would hire DVDs and watch movies all night in the weekends, Kala was the one to plan the snacks, marie biscuit and tea mostly. We really relished each others' cooking. I have watched lots and lots of hindi movies with these girls. And we have been to many theaters in Bangalore. Also we made trips to Nandi hills, Mysore and Fun world. We used to celebrate our festivals like vinayaka chadurthi, pooja in the most traditional way, with all the traditional items like kozhukkattai, sundal etc.

We always had home-made sunday snacks, even though we would want to make some, and it would turn to be something else. Whether we enjoyed the snacks or not, we enjoyed the making of it...:-)Gobi manchuriyan was the ultimate one, as we did not have corn flour, I like a 'Big Chef' suggested to grind corn flakes to get corn flour, and the other ducks believed it and did the same and when we were trying to fry the gobis dipped in corn(flakes) flour, all the flour got seperated and we got gobi and flour manchurians seperately. The tragedy was that Ramalakshmi told her collegues who were working on sunday that she would get them gobi manchuriyan and they were waiting...

One thing none of us were good at, was to keep the house clean. Our house used to look like 'kuppa thotti' all the time.

All of them are well settled now, and we are in touch, not so often though.

People I am gonna blog about in my next episode, are some that I feel "Blessed with".
Watch this space!


(To be continued)

No Name Yet - Part 4

Took so long a gap to write the part 4...*sigh*
Here I go!

After college, I joined a company in chennai where I acquired some friends.
30 of us from this company have got transferred to the head office in Delhi, after one year of being in Chennai. Amongst this 30, 6 of us were girls and we took a house for rent and stayed together, very close to our office in Gurgaon.
Along with me there were Subha Santhanam, Vidya Anantharaman, Anitha - I used to call her Antoo, Malathi S Iyengar - she loved to refer her this way, Namrata Limaye -the only Non-tamil of the six.
All that was common in us was that we worked for the same company and we lived in the same house. But otherwise, we were like navagrahams, each facing one side...yeah we were so different, our kind, our tastes, our interests...nothing was alike.
The moment we step in office, we would have different friends for each of us!!! huh.
One thing I must really thank these girls for, I started cooking for the first time during that stay and whatever crap I made, they never complained and they used to encourage me and appreciate me.
I have become beauty conscious while I was with them, have learnt a lot about doing facial, pedicure etc...
They insisted me to buy a jeans and that was the first time I wore a jeans...funtime.
Each had a unique talent, Subha was so witty and she had loads of mind presence, Malathi used to sing so well, Vidya too and she was the one to teach us beauty tips, Nam was so trendy and bubbly and Antoo, so composed.
Me and Antoo made a trip to Agra with few other colleagues on a friday, we went all the way to find out that Tajmahal was closed on Fridays...~Sigh~
We also had few other outings, shopping in Delhi etc...
After leaving from Delhi, we were not so much in touch, but its not that we totally lost it as well, we catch up on yahoo,gchats with some smileys and hi,bye..they are all well settled, Antoo being married to a common friend of me and my husband - Surya.
Actually my husband and Surya also worked with us in the same company, transferred to Delhi etc, and Antoo and Surya got married and few months later when me and my hub announced our wedding, our colleagues were like, "நம்ம கம்பெனி ல எத்தினி பேரு டா இப்புடி கிளம்பிருக்கீங்க??"

There were many other people with whom I used to pass time while in the chennai office, we used to share the lunch table, have lengthy coffee breaks and leisure walks and I am in touch with only Vaneetha, that too very occasionally in gchat.
I was staying in a PG in Velacherry while in Chennai, and me being a chatter-box obviously had many time-being friends. Ezhil, who I felt damn sweet, is still in touch with me through email and phone. From her I get to know about the other girl Jeyalakshmi, but about my other room-mates, Gayathri, Jinci, Swetha..I really dont know.
We all had visited Mangaadu amman temple together...that was the first time I went there. We all would sit together and watch 'Chithie' serial in sun TV and also sun music was our all time favourite. The day when Chithie climax was to be telecasted it was like a big day in our PG, with all the girls sitting and biting nails in front of the TV...:-)

Jincy was from Kerala and she made me watch, 'Summer in Bethlegam' mallu movie, which was later remade in Tamil as 'Lesa Lesa'. She was the only one to have a mobile phone in our room....hoooo.
I was the one to sing(?) to some extent in that room, so these girls would ask me to sing, and they would listen and say, "its good...". Me happy.I used to even sing to their choice...hee hee.
Had good time in this PG, though for a very short period of 5 months or so, before leaving for Delhi.


(To be continued)

Wednesday 2 April 2008

டைரக்டர் பாலாவுக்கு...

உங்களுக்கு எதுக்கு இப்டி ஒரு கொலை வெறி?
உங்க படத்துல கண்டிப்பா யாராச்சும் ஒருத்தரை கொல்லுறீங்க...
அதுலயும் சூர்யா ரொம்ப பாவம். ரெண்டு படத்துல அவரை போட்டு தள்ளிட்டீங்க.
விக்ரமை மட்டும் எப்போவும் உயிரோட..ஆனா offmind ஆ அலைய விடுறீங்க...
atleast "நான் கடவுள்" படத்துல எல்லாரையும் normal ஆ விட்டு வெய்யுங்க, இல்லன்னா படம் பாக்க வரவங்கல்லாம் "அதான் தெரியுமே" ன்னு சொல்லிட்டு போய்டுவாங்க...சொல்லிட்டேன் ....ஆமா...
பெரும்பாலான தமிழ் blog sites ல atleast ஒரு பதிவாவது சினிமா பத்தி போடுறாங்க.
கொஞ்சம் கமர்ஷியல் ஆ இருக்கணும் ல...
so நானும்....
நான் நெறைய படம் பாப்பேன். அதுவும் abroad வந்த அப்றோம் ரொம்ப too much.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் னு நாலு language படமும் பாத்து தள்ளுறோம் நானும் அவரும். எங்க ரெண்டு பேருக்குமே இங்கிலீஷ் படம் பாக்குற taste இல்ல. நாங்களும் வளத்துக்க try பண்ணி, சில படம் பாத்தோம். "its not our kind" னு "ச்சீ , இந்த பழம் புளிக்கும்" பழமொழிய style ஆ சொல்லிட்டு free யா விட்டுட்டோம். என்னா நாங்க try பண்ண படம் லாம் அப்டி. ""casino royale", "M I"......sniff.

இப்போ விஷயம் என்னன்னா அர்ஜுன் தூங்கிட்டு இருக்கதுனால நான் வெட்டியா இருக்கேன். so அவனுக்கு வயது வரும் போது , நம்முடைய காலத்துல வந்த எந்த படம் லாம் அவனை பாக்க வெக்கணும் னு யோசிச்சேன்.

இது எனக்கு பிடித்த படங்களின் list அல்ல. அது ரொம்ப பெரிசு.

1. அன்பே சிவம்
2. அந்நியன்
3. மொழி
4. கண்ட நாள் முதல்
5. Dil Chahta hai
6. lagaan
7.அஞ்சலி

.
.
.

list வளரும்.

நான் கதை கேட்ட கதை...

நான் சின்ன புள்ளயா இருக்கப்போ கொஞ்சம் தில்லாலங்கடி யா தான் இருந்து இருக்கேன். இது எங்க சித்தப்பா என்னிடம் பகிர்ந்து கொண்ட என் சிறு வயது நிகழ்வுகளில் ஒன்று.

எனக்கு ஒரு நாலு வயசு இருக்குமாம்.
அப்பல்லாம் எனக்கு கதை கேக்க ரொம்ப பிடிக்குமாம்.
எல்லா பிள்ளைங்களும் மாதிரி தான்.
எனக்கு சில நேரத்துல கதை சொல்றது எங்க சித்தப்பா.
எனக்கு கதையில கிளைமாக்ஸ் 'அப்புறமா எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்களாம்" அப்டி இருக்கணுமாம். அப்டி இல்லன்னா ரொம்ப சோகமா சமயத்துல அழுவ கூட ஆரம்பிச்சுடுவேனாம்.
இப்போ கூட எனக்கு anti-climax உள்ள படங்கள் பாத்தா கடுப்பா இருக்கும். என்னடா இப்டி முடிஞ்சுடுச்சே னு நெனைப்பேன்.

எங்க சித்தப்பா இத நோட் பண்ணிக்கிட்டே இருந்து இருக்காரு...அவருக்கு சின்ன புள்ளங்களை அழுவ வெக்குறதுன்னா ரொம்ப இஷ்டமாம்.
ஒரு நாளு அவருக்கு யாரும் கெடைக்காம, என்னைய வெச்சு காமெடி பண்லாம் னு
ஒரு மெகா பிளான் பண்ணி(??) , எனக்கு பாட்டி வடை சுட்ட கதை சொல்லி இருக்காரு.
அந்த கதை உங்க எல்லாருக்கும் தெரியும்ங்கரதுனால நான் நேரா மேட்டர் க்கு வரேன்.

climax ல "நரி வடைய தூக்கிட்டு போயிடுச்சாம். காக்கா ரொம்ப சோகமா இருந்துச்சாம்" அப்டின்னு சொல்லிட்டு என் மொகத்தையே பாத்துட்டு இருந்து இருக்காரு அவரு. நான் எந்த நேரமும் ராகத்தை ஆரம்பிச்சுடுவேன்..enjoy பண்லாம் னு நெனச்சுட்டே இருந்தாராம். பின்னாளில் இணைய ஏடுகளில் இடம் பெறப் போகும் இந்த நிகழ்வுக்கு( யப்பா... என்னா பில்ட் அப்பு...!!!) எங்க அப்பா, பாட்டி னு audience வேற...எல்லாரும் suspense ஓட என் மூஞ்ச பாத்துட்டே இருந்தாங்களாம்.
நான் என்ன பண்ணேன் தெரியுமா????
.
.
.
.
.
'அப்புறம் அந்த நரி சந்தோஷமா இருந்துச்சாம்' அப்டின்னு சொல்லிட்டு எந்திரிச்சு போயிட்டேனாம்.
அன்னிலேர்ந்து எங்க சித்தப்பா எனக்கு கதை சொல்றதையே விட்டாராம்.